தொடங்கியது மழை.. நிரம்பும் ஏரிகள்.. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் ஹேப்பி
Kanchipuram Red Alert: காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மழை காரணமாக ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக 25 ஏரிகள் நிறைந்துள்ளன.
ஏரிகள் நிறைந்த மாவட்டம்
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டமாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்து வருகின்றன. குறிப்பாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 900 திற்கும் மேற்பட்ட ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. பல நூற்றாண்டுகளாகவே காஞ்சிபுரம் ஏரிகள் நிறைந்த பகுதியாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது . பாலாறு மற்றும் செய்யாறு ஆகிய ஆறுகள் இருப்பதால், பாலாற்றுக்கு தொடர்புடைய பாலாற்று படுகை ஏரிகள் அனைத்தும் காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பாலாற்று படுகை ஏரிகள்ள காஞ்சிபுரம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்ட நீர்வளத்துறை
அந்த வகையில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த 16 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 528 ஏரிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 381 ஏரிகள், திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த 93 ஏரிகள், திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த நான்கு ஏரிகள் என மொத்தம் ஆயிரத்து இருவத்தி ரெண்டு ஏரிகள் காஞ்சிபுரம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
நிரம்பும் ஏரிகள்
அந்த வகையில் காஞ்சிபுரம் வருகின்ற மாவட்டத்தில் தற்போது 25 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 23 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டி உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 381 ஏரிகளில் இரண்டு ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 104 ஏரிகள் 75 சதவீதத்திற்கும் மேல் தண்ணீர் உள்ளது . 50 சதவீதத்துக்கு மேல் சுமார் 220 ஏரிகள் தண்ணீர் உள்ளது. 25 சதவீதத்திற்கும் மேல் 335 ஏரிகளும், 25 சதவீதத்திற்கு கீழ் 336 ஏரிகளும் தண்ணீர் இருப்பு உள்ளது.
மழை முன்னெச்சரிக்கை என்ன ?
சென்னை, காஞ்சிபுரம் , செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வடகிழக்கு பருவமழையானது” இரவு மற்றும் காலை நேரங்களில்தான் கனமழையானது இருக்கும் எனவும் சென்னையில் , இன்று மாலையிலிருந்தே மழை தொடங்கும் எனவும் சென்னை மண்டல வானிலை மைய இயக்குநர் தெரிவித்தார். சென்னை முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.