(Source: ECI/ABP News/ABP Majha)
Kanchipuram Power Shutdown : காஞ்சிபுரத்தில் நாளை மின்தடை... காஞ்சிபுரம் மக்களின் உஷார்.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா ?
Kanchipuram Power Shutdown : பருவம் மழை முன்னிட்டு அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்
காஞ்சிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்தடை அறிவிப்பு பராமரிப்பு பணிகள்
பல்வேறு பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாடு முழுவதும், மாதத்தில் ஒரு நாள் மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். அவ்வாறு மின் நிறுத்தம் செய்யும் நாள்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதேபோன்று பருவம் மழை முன்னிட்டு அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.
மின்தடை
அதுபோன்ற சமயங்களிலும், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். சில சமயங்களில் குறிப்பிட்ட நேரத்தை விட முன்னதாகவும் பணிகள் முடிக்கப்பட்டு மின்சாரம் தரப்படும். அந்த வகையில் நாளை காஞ்சிபுரம் பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் 110/33-11 கே.வி துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் வரும் 05.10.2024 சனிக்கிழமை அன்று மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் காஞ்சிபுரம் நகர் பகுதியில் , நாளை காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள் ?
அந்த நேரத்தில் காஞ்சிபுரம் நகரம் மற்றும் நகரத்தை ஒட்டியுள்ள சில பகுதிகளான பாலிமேடு, வெள்ளைகேட், காரைப்பேட்டை, கூரம், கீழம்பி, திம்மசமுத்திரம் அசோக்நகர், ஏனாத்தூர், வையாவூர் இந்திராநகர் மற்றும் 33/11 கே.வி வேளியூர் மற்றும் 33/11 கே.வி வையாவூர் துணை மின் நிலையங்களை சேர்ந்த கிராமங்களிலும் 05.10.2024 சனிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை மின் தடை ஏற்படும். இத்தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் காஞ்சிபுரம் / வடக்கு கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.