![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kanchipuram Power Shutdown: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை மின் தடை..! எங்கெல்லாம் தெரியுமா?
sriperumbudur power shutdown Today : ஒரகடம் உப கோட்டம், வடக்குப்பட்டு துணை மின் நிலையம் மின் சாதன பராமரிப்பு பணிகள் முன்னிட்டு மின் விநியோகம் தடை.
![Kanchipuram Power Shutdown: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை மின் தடை..! எங்கெல்லாம் தெரியுமா? Kanchipuram Power Shutdown Notice of power outage due to essential electrical maintenance works at Volt substation in sriperumbudur tnn Kanchipuram Power Shutdown: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை மின் தடை..! எங்கெல்லாம் தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/22/1c6ce2870f784b4990d58ec75c52b3d21716378977082490_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பல்வேறு பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாடு முழுவதும், மாதத்தில் ஒரு நாள் மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். அவ்வாறு மின் நிறுத்தம் செய்யும் நாள்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதேபோன்று பருவம் மழை முன்னிட்டு அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.
திருப்பெரும்புதுார் கோட்டம், ஒரகடம் உப கோட்டம், வடக்குப்பட்டு துணை மின் நிலையம் மின் சாதன பராமரிப்பு பணிகள் முன்னிட்டு மின் விநியோகம் தடை.
திருப்பெரும்புதூர் கோட்டம், ஒரகடம் உப கோட்டம், வடக்குப்பட்டு 110/33-11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 11.06.2024 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 14.00 மணி வரை புதுக்கோட்டை, வடக்குப்பட்டு, வளையகருணை, உமையாள் பரனச்சேரி, ஆப்பூர், சேந்தமங்கலம், வஞ்சுவான்சேரி, சரப்பனன்சேரி, நாவலூர், வட்டாம்பாக்கம், சிறுவான்சூர், ஓரத்தூர், சென்னாகுப்பம், வைப்பூர் மற்றும் இதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என திருப்பெரும்புதுார் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
திருப்பெரும்புதுார் கோட்டம், ஒரகடம் உப கோட்டம், பிள்ளைப்பாக்கம் துணை மின் நிலையம் மின் சாதன பராமரிப்பு பணிகள் முன்னிட்டு மின் விநியோகம் தடை.
திருப்பெரும்புதுார் கோட்டம், ஒரகடம் உப கோட்டம், பிள்ளைப்பாக்கம் 110/33-11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 15.06.2024 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 14.00 மணி வரை வெங்காடு, நாவலூர், பிள்ளைப்பாக்கம், TVH Appartment, பிள்ளைப்பாக்கம் சிப்காட் மற்றும் இதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என திருப்பெரும்புதுார் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)