மேலும் அறிய

முதல் கூட்டுறவு காஞ்சியில்.. காஞ்சிபுரம் பற்றி தெரியாத சுவாரஸ்ய தகவல்கள் இதோ..! 

Kanchipuram: காஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவு துறையில், நூறாண்டுகளை கடந்து சாதனை படைத்து வருகிறது

கூட்டுறவு என்பது பொதுமக்கள் தாமாகவே இணைந்து பொருளாதார பயன்களை அனைவரும் பெறுவதற்காக கூட்டாக செயல்படும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இந்தியாவின் முதல் கூட்டுறவு கடன் சங்கம் 1904-ஆம் ஆண்டு இன்றைய திருவள்ளூர் மாவட்டம் திரூரில் தொடங்கப்பட்டது. 

கூட்டுறவு சங்கங்கள் 

இதுபோன்று 160 முதன்மைகள் மாநிலத்தில் உள்ளன. ஆண்டாண்டுகாலமாக, கூட்டுறவு அமைப்பு படிப்படியாக வளர்ச்சியடைந்து, தற்போது 17 தலைமை சங்கங்கள், 216 மத்திய சங்கங்கள் மற்றும் 22,690 தொடக்கச் சங்கங்கள், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் 14 செயல்பாட்டு பதிவாளர்களின் கீழ் செயல்படுகிறது.

கூட்டுறவு சங்கங்கள் வேளாண்மை செழிப்புற, வேளாண் கடன், ஒரு முக்கிய பங்கு வகிப்பதால், கூட்டுறவு கடன் நிறுவனங்கள் வேளாண் சமுதாயத்திற்குத் தேவையான கடன் மற்றும் இடுபொருட்கள் நிறைவு செய்து நாட்டில் வேளாண் அமைப்பில் ஆக்கப்பூர்வமான மாறுதல்களை ஏற்படுத்தி உள்ளன.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டமும் கூட்டுறவு சங்கங்களில் சிறப்பாக செயல்படும் மாவட்டங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போதும் தற்போது மாவட்டம் பிரிந்த பிறகும் காஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவுத் துறையில், முக்கிய பங்காற்றி வருகிறது. 

முதல் கூட்டுறவு காஞ்சியில்..

முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக இருந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம் சேர்ந்த அவர் சின்ன காஞ்சிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் உறுப்பினராக இருந்துள்ளார். அந்த அளவிற்கு கூட்டுறவு சங்கங்கள் மக்களுக்கு முக்கியம் வாய்ந்த ஒன்றாக இருந்து வருகிறது. 

இந்தியாவிலேயே தொடங்கப்பட்ட முதல் நகர கூட்டுறவு வங்கி காஞ்சிபுரத்தில் தான் தொடங்கப்பட்டது. 1904 ஆம் ஆண்டு முதல் நகர கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டுறவு சங்கத்தை திருவான்பகதூர் எம். ஆதிநாராயண என்பவர் நிறுவன தலைவராக தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 1904 இல் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் கூட்டுறவு மேற்பார்வை சங்கம் 1910இல் உத்தரமேரூரில் தொடங்கப்பட்டது. உத்திரமேரூர் கூட்டுறவு சங்கம் தான் 1913-ல், சென்னை மாகாணத்தில் சொந்த அலுவலக கட்டிடம் கொண்ட முதல் தங்கமாகவும் திகழ்ந்தது. 

முதல் நெசவாளர் சங்கம் 1905 இல் தொடங்கப்பட்டது பெரிய காஞ்சிபுரம் நகர்ப்புற நெசவாளர்கள் சங்கம் தான் என்பதும் காஞ்சிபுரத்தில் பெருமையாக உள்ளது. முதல் கூட்டுறவு மாநாடு 1909 இல் காஞ்சிபுரத்தில் தான் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட வங்கி ஒன்றியம் தற்போதைய காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி 1915இல் முதன்மை சங்கங்களை அதன் உறுப்பினர்களாக கொண்டு அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நில அடமான வங்கி இன்றைய காஞ்சிபுரம் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி 1925 இல் தொடங்கப்பட்டது. 

முதன்மையாக செயல்படும் காஞ்சிபுரம் 

எப்போதுமே காஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவுத் துறையில் முதன்மையான மாவட்டங்களில் ஒன்றாகவே செயல்பட்டு வருகிறது. ஆனால் சமீப காலமாக சில கூட்டுறவு சங்கங்கள் தொடர் நஷ்டத்தில் இயங்கி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறைக்கு இருக்கும் பெருமையை, காக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சிறு சிறு கூட்டுறவு சங்கங்களையும் மீட்டெடுக்க அரசு மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
Vijay Sethupathi :
Vijay Sethupathi : "இது என் படத்தோட ப்ரோமோஷன்..அத பத்தி ஏன் பேசனும்?" சூடான விஜய் சேதுபதி
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு  விளக்கம்
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
மதுரை மக்களே உஷார்.. நாளை (17-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் விவரம் இதோ
மதுரை மக்களே உஷார்.. நாளை (17-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் விவரம் இதோ
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
Embed widget