மேலும் அறிய

காஞ்சிபுரம் திமுக மேயருக்கு மற்றொரு சிக்கல்! லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்த அதிமுக கவுன்சிலர்! நடந்தது என்ன?

திடீரென திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் திடீரென மேயர் மகாலட்சுமி யுவராஜுக்கு எதிராக போர் கொடி தூக்கினர்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் சாலை தெருவிளக்குகள் தரக்குறைவாக அமைத்துள்ளதாகவும், இதில் 5 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக மாமன்ற அதிமுக உறுப்பினர் சிந்தன்,  காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சி

காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இந்த மாநகராட்சியில் திமுகவினர் அதிக பெரும்பான்மையுடன் மேயராக மகாலட்சுமி செயல்பட்டு வருகிறார். ஆரம்ப காலம் முதலில் அதிமுகவினர் பல்வேறு பணிகள் செய்து வருவதில் முறைகேடுகளும்,  தரம் குறைவாக இருப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.

காஞ்சிபுரம் திமுக மேயருக்கு மற்றொரு சிக்கல்! லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்த அதிமுக கவுன்சிலர்! நடந்தது என்ன?

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி முழுவதும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெரு மின்விளக்குகள் மின்சாரத்தில் இயங்கி வந்த நிலையில், மின் கட்டணம் குறைப்பு மற்றும் மின்சார சிக்கனம் வலியுறுத்தி அனைத்து மின்விளக்குகளையும் எல்இடி மின் விளக்குகளாக மாற்ற டெண்டர் கோரப்பட்டு, சென்னையை சேர்ந்த இரண்டு நிறுவனங்களுக்கு சுமார் 12.5 கோடி மதிப்பில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது. 

விதிகளை பின்பற்றவில்லை

இந்நிலையில் இந்த பணிகளில் அரசு விதிகளை பின்பற்றவில்லை என்றும், தரமற்ற பொருட்களை பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு பயனில்லை எனக் கூறி அதில் ஊழல் நடந்துள்ளதாக அதிமுக மாமன்ற உறுப்பினர் சிந்தன், காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். 

அம்மனுவில் , கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆணைப்படி,  காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் தெருவிளக்குகள் அமைக்க ரூ 12.5 கோடி ஒப்பந்தம் கோரப்பட்டதாகவும், தெருவிளக்குகள் அமைக்க காப்பர் கேபிள்களை பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறைகளை மீறி அலுமினிய ஒயர்களை கொண்டு இணைப்புகள் மேற்கொள்ளப் படுவதாகும், மிக மலிவு விலையில் எல்இடி தெரு விளக்குகள் பயன்படுத்துவதால் ஓரிரு நாட்களிலே பழுதாகி பொதுமக்களுக்கு பயனற்றதாக விளங்கி வருகிறது. 

காஞ்சிபுரம் திமுக மேயருக்கு மற்றொரு சிக்கல்! லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்த அதிமுக கவுன்சிலர்! நடந்தது என்ன?

இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் இப்பணிகள் 50 சதவீதத்திற்கு மேல் முடிந்து விட்டதாகவும், இதற்கு லஞ்சமாக ரூபாய் ஐந்து கோடிக்கு மேல் மேயர் மற்றும் ஆணையர், பொறியாளர்,  மேயரின் கணவர் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.  இதனால் இதனை ஆய்வு செய்து ஊழல் மற்றும் லஞ்சம் தொடர்பான செய்கையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் மனு அளிதத்துள்ளதாக மாமன்ற உறுப்பினர் சிந்தன் தெரிவித்துள்ளார் .

பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும்

கடந்த சில தினங்களுக்கு முன்பு மேயர் மீது நம்பிக்கை இல்லை என கூறி முப்பதுக்கு மேற்பட்ட திமுக அதிமுக பாஜக மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனு அளித்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர உத்தரவிட வேண்டுமென மனு அளித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, திடீரென திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் திடீரென மேயர் மகாலட்சுமி யுவராஜுக்கு எதிராக போர் கொடி தூக்கினர்.

காஞ்சிபுரம் திமுக மேயருக்கு மற்றொரு சிக்கல்! லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்த அதிமுக கவுன்சிலர்! நடந்தது என்ன?

தொடர்ந்து மேயர் மகாலட்சுமி யுவராஜ் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். இந்த சர்ச்சை தற்பொழுது காஞ்சிபுரம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், மீண்டும் மேயர் தரப்புக்கு எதிராக புகார் அளித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சமாதானம் செய்யும் மேலிடம்! விடாப்பிடியாக நிற்கும் கவுன்சிலர்கள்! காஞ்சி திமுக மேயருக்கு குடைச்சல்!
சமாதானம் செய்யும் மேலிடம்! விடாப்பிடியாக நிற்கும் கவுன்சிலர்கள்! காஞ்சி திமுக மேயருக்கு குடைச்சல்!
Breaking News LIVE:  முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 40வது முறையாக நீட்டிப்பு
Breaking News LIVE: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 40வது முறையாக நீட்டிப்பு
வீட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட தம்பி! சைவ பிரியரான அண்ணன் தற்கொலை! - சென்னையில் சோக சம்பவம்!
வீட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட தம்பி! சைவ பிரியரான அண்ணன் தற்கொலை! - சென்னையில் சோக சம்பவம்!
ஆட்டோமேட்டிக் கழிவறை, நாப்கின் டிஸ்பென்சர், தமிழ்நாட்டில் முதல் முறை: அசத்தும் அரசு மகளிர் பள்ளி!
ஆட்டோமேட்டிக் கழிவறை, நாப்கின் டிஸ்பென்சர், தமிழ்நாட்டில் முதல் முறை: அசத்தும் அரசு மகளிர் பள்ளி!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Snake in Amazon Parcel | அமேசான் பார்சலில் விஷப்பாம்பு!அதிர்ச்சியில் பெங்களூரு தம்பதி..வைரல் வீடியோPTR inaugurates public toilets | ”எங்கடா இங்கிருந்த TOILET”அதிர்ந்து போன PTR முழித்த அதிகாரிகள்Dad Beaten by Son | தந்தையை கொடூரமாக தாக்கிய மகன் பதற வைக்கும் காட்சி! நடந்தது என்ன?Bird Flu | பரவியதா பறவை காய்ச்சல் கொத்து,கொத்தாக மடியும் காகங்கள் அதிர்ச்சி காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சமாதானம் செய்யும் மேலிடம்! விடாப்பிடியாக நிற்கும் கவுன்சிலர்கள்! காஞ்சி திமுக மேயருக்கு குடைச்சல்!
சமாதானம் செய்யும் மேலிடம்! விடாப்பிடியாக நிற்கும் கவுன்சிலர்கள்! காஞ்சி திமுக மேயருக்கு குடைச்சல்!
Breaking News LIVE:  முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 40வது முறையாக நீட்டிப்பு
Breaking News LIVE: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 40வது முறையாக நீட்டிப்பு
வீட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட தம்பி! சைவ பிரியரான அண்ணன் தற்கொலை! - சென்னையில் சோக சம்பவம்!
வீட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட தம்பி! சைவ பிரியரான அண்ணன் தற்கொலை! - சென்னையில் சோக சம்பவம்!
ஆட்டோமேட்டிக் கழிவறை, நாப்கின் டிஸ்பென்சர், தமிழ்நாட்டில் முதல் முறை: அசத்தும் அரசு மகளிர் பள்ளி!
ஆட்டோமேட்டிக் கழிவறை, நாப்கின் டிஸ்பென்சர், தமிழ்நாட்டில் முதல் முறை: அசத்தும் அரசு மகளிர் பள்ளி!
Rain Alert: இன்று இரவும் சென்னையில் மழை? அடுத்த 5 நாட்களுக்கு அப்டேட் தந்த வானிலை ஆய்வு மையம்!
இன்று இரவும் சென்னையில் மழை? அடுத்த 5 நாட்களுக்கு அப்டேட் தந்த வானிலை ஆய்வு மையம்!
Illicit Liquor : ”கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் ?” 3 பேர் சாவுக்கு உண்மையான காரணம் என்ன ?
Illicit Liquor : ”கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் ?” 3 பேர் சாவுக்கு உண்மையான காரணம் என்ன ?
EPS Condemns: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 5 பேர் பலி? ஈபிஎஸ், அண்ணாமலை கண்டனம்..!
EPS Condemns: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 5 பேர் பலி? ஈபிஎஸ், அண்ணாமலை கண்டனம்..!
NEET Protest: வெடிக்கும் விவகாரம்; நீட் தேர்வுக்கு எதிராக திமுக ஜூன் 24-ல் ஆர்ப்பாட்டம்
NEET Protest: வெடிக்கும் விவகாரம்; நீட் தேர்வுக்கு எதிராக திமுக ஜூன் 24-ல் ஆர்ப்பாட்டம்
Embed widget