Kanchipuram Book Fair: காஞ்சி மக்களே..! காஞ்சிபுரம் புத்தக திருவிழா எப்போது தெரியுமா ?
Kanchipuram Book Festival: காஞ்சிபுரத்தில் புத்தக திருவிழா ஜனவரி 31-ஆம் தேதி முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது

Kanchipuram Book Fair 2025 Date: காஞ்சிபுரம் புத்தகத் திருவிழா 2025 வருகின்ற பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் புத்தகத் திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற உள்ளன.
புத்தக திருவிழா 2025
"அணுகுண்டு ஒருமுறைதான் வெடிக்கும், ஆனால் புத்தகம், திறக்கும் போதெல்லாம் வெடிக்கும்" புத்தக வாசிப்பு என்பது ஆக சிறந்த பொழுதுபோக்கில் ஒன்றாக இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு சார்பில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறது.
புத்தகத் திருவிழா மூலம் பல லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்கப்பட்டு, மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் அறிவுக்கூர்மையை மேம்படுத்த இந்த புத்தகத் திருவிழா மிகப்பெரிய பங்காற்றி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா, காஞ்சிபுரம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
காஞ்சிபுரம் புத்தக திருவிழா 2025 - Kanchipuram Book Fair 2025
அந்த வகையில் இந்த ஆண்டு காஞ்சிபுரம் புத்தகத் திருவிழா குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் காஞ்சிபுரம் புத்தகத் திருவிழா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்று வருகிறது. 10 நாட்களுக்கு மேலாக நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவில், காஞ்சிபுரத்தை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் தொடர்ந்து மூன்றாவதாண்டாக, இந்த ஆண்டு காஞ்சிபுரம் புத்தகத் திருவிழா 2025 வருகின்ற 31ஆம் தேதி துவங்குகிறது. அடுத்த 11 நாட்களுக்கு இந்த புத்தகத்தில் உள்ள நடைபெற உள்ளது. பிப்ரவரி 10ஆம் தேதி வரை காஞ்சிபுரம் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.
எந்த இடத்தில் நடைபெறுகிறது
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக மைதானத்தில் இந்த புத்தகத்தில் உள்ள வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட புத்தக அரங்கங்கள் இந்த புத்தகத் திருவிழாவில் இடம் பெற உள்ளன.
புத்தகத் திருவிழா நாள்தோறும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் பல எழுத்தாளர்கள் படைப்புகளும் இடம்பெறுகின்றன. நாள்தோறும் மாலை வேளையில் கலை நிகழ்ச்சிகள், எழுத்தாளர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. தினந்தோறும் காலை முதல் மாலை வரை சிறப்பு அழைப்பாளர்களின் கருத்துரைகள், சிந்தனை தூண்டும் பேச்சாளர்களின் கருத்துரைகள், பட்டிமன்றங்கள், மாணவ, மாணவிகள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

