Kanchipuram: டிஜிட்டலுக்கு மாறும் காஞ்சிபுரம்.. எல்லாமே ஆன்லைன்.. ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது..
Geographical Digital Survey in Kanchipuram: காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஒவ்வொரு பகுதியும் புவியியல் ரீதியான சர்வே எண்களை டிஜிட்டல் மையமாக உள்ளனர்

Kanchipuram News: காஞ்சிபுரத்தில் டிஜிட்டல் முறையில் ஒவ்வொரு பகுதியும், புவியியல் ரீதியாக சர்வே எண்களை டிஜிட்டல் மையமாக உள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி - Kanchipuram Corporation
மிகவும் பழமையான நகரமாக காஞ்சிபுரம் இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் பல லட்சக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36 சதுர கிலோமீட்டர் பரப்பில், 33,000 பெரிய கட்டிடங்கள் உள்ளன. இதேபோன்று காஞ்சிபுரத்தில் ஆயிரக்கணக்கான வீட்டுமனைகளும், பல்வேறு விதிகளை மீறிய கட்டிடங்களும், முறையாக வரிகள் செலுத்தாத காலி கட்டிடங்களும் உள்ளன.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் விரைவில் புவியியல் ரீதியிலான டிஜிட்டல் பதிவுகள் பணி தொடங்கப்பட உள்ளன. இதற்காக மத்திய அரசு தனியார் நிறுவனம் மூலம், டிஜிட்டல் பதிவு செய்வதற்கான பணிகளை வருகின்ற இன்று முதல் தொடங்கப்பட உள்ளன.
மத்திய அரசு சிறப்பு திட்டம்
நக்ஷா என்ற பெயரில், மத்திய அரசின் நில அளவைத் துறை புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் நகர்ப்புற எல்லைக்குட்பட்ட அனைத்து இடங்களையும், புவியில் ரீதியாக டிஜிட்டல் பதிவு செய்யப்பட உள்ளது. மத்திய அரசின் நில அளவை துறை சார்பில், நகர்புறங்களில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் மற்றும் காலியிடங்கள் குறித்து டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தப்பட உள்ளது.
இதையும் படிங்க: பெங்களூர் ஓரம் போங்க.. நியூயார்க்குக்கு இணையாக சென்னை.. 2026-இல் காத்திருக்கும் சம்பவம்..
திட்டத்தில் செயல்பாடுகள் என்ன?
இந்தப் புவியில் ரீதியான டிஜிட்டல் பதிவுகள் மூலம் நகர்ப்புற எல்லைகள், நகரில் இருக்கும் தெருக்கள், கட்டிடம் போன்றவற்றை ஆய்வு செய்து டிஜிட்டல் டேட்டாக்களாக மாற்றப்பட உள்ளன. இதன்மூலம் கட்டிடங்களின் உயரம், அதன் உரிமையாளர் பெயர், யார் பெயரில் வீட்டு வரி செலுத்தப்படுகிறது போன்ற அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைத்து, புவியியல் ரீதியான பதிவுகள் இணையதளத்தில் வெளிப்படுத்தப்படும்.
இதுபோன்ற புள்ளியல் ரீதியான டிஜிட்டல் பதிவுகள் ஏற்கனவே ராஜஸ்தான், ஒடிசா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பத்திற்கும் மேற்பட்ட நகராட்சிகளிலும் காஞ்சிபுரம் கோவை மற்றும் காரைக்குடி ஆகிய மாநகராட்சியிலும் டிஜிட்டல் ரீதியான பதிவு செய்யும் பணிகள் நடைபெற உள்ளன.
சிறப்பம்சங்கள் என்னென்ன ? Key Features Of Geographical Digital Survey
இவ்வாறு புவியியல் ரீதியாக தகவல்கள் எடுப்பது மூலம், அனைவருக்கும் விவரங்கள் வெளிப்படையாக தெரியும். இதனால் நில மோசடி மற்றும் அரசுக்கு வரி ஏய்ப்பு போன்றவை பெருமளவு தவிர்க்கப்படும். அதேபோன்று எதிர்காலத்தில் நகர்புறங்களில் புதியதாக திட்டம் ஏதாவது கொண்டுவர வேண்டும் என்றால், முழு தகவலை வைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் திட்டங்களை வழி வகுக்க முடியும்.
நகர்ப்புறங்களில் இருக்கும் பல்வேறு கட்டிடங்கள் விதிகளை மீறியும், வரியே செலுத்தாத காலி மனைகளும் கட்டிடங்களும் நிறைய உள்ளன. இதன் மூலம் அதன் விவரங்கள் தெரியவரும், அவர்களிடமிருந்து வரி வசூல் செய்யப்பட்டு நகராட்சி மற்றும் மாநகராட்சியின் வருவாயை பெருக்கிக் கொள்ள முடியும்.
எவ்வாறு தகவல்கள் எடுக்கப்படவுள்ளது?
ட்ரோன் மூலம் இந்த டிஜிட்டல் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளன. 2டி மற்றும் 3டி முறையில் படம் எடுக்க ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளன. சர்வே துறை மற்றும் மாநகராட்சியில் உள்ள பில் கலெக்டர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

