மகா கும்பமேளா - விஜய் தேவரகொண்டா புனித நீராடல்!

Published by: ஜான்சி ராணி

மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளாவில், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்.

நடிகர் விஜய் தேவரகொண்டா தனது குடும்பத்தினருடன் மகா கும்பேளாவில் கலந்துகொண்டு கங்கை நதியில் நீராடியுள்ளார்.

புனித நீராடும் நடிகர் விஜய் தேவரகொண்டா..

திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் என வெளிநாடுகளில் இருந்தும் இங்கு வந்து நீராடி வருகின்றனர்.

நடிகர் விஜய் தேவரகொண்டா குடும்பத்தினருடன் மகா கும்பமேளா நிகழ்வில்....

விஜய் தேவரகொண்டாவின் நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருகின்றனர்.

இவரின் கிங்க்டம் படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இது ஆக்சன் ட்ராமா படம்.