மேலும் அறிய

தமிழக வரலாற்றில் முதல்முறை! காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தி.சினேகா அதிரடி உத்தரவு!

"மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள், வரலாற்றிலேயே முதன்முறையாகசுய கணக்கெடுப்பு மற்றும் டிஜிட்டல் முறையில் நவீனமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது."

தமிழ்நாட்டில் 2027ஆம் ஆண்டிற்கான மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள், வரலாற்றிலேயே முதன்முறையாக "சுய கணக்கெடுப்பு (Self Enumeration)" மற்றும் "டிஜிட்டல்" முறையில் நவீனமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இம்முறை இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு (HLO) வரும் 2026 ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக முதன்மையான மக்கள்தொகை கணக்கெடுப்பு (PE) பணிகள் 2027 பிப்ரவரி மாதத்தில் மேற்கொள்ளப்படவுள்ளன.

பொதுமக்கள் தாங்களாகவே விவரங்களை பதிவிடும் எளிய வழிமுறை முதற்கட்ட வீட்டுபட்டியல்

கணக்கெடுப்பிற்கு பொதுமக்கள் தங்களின் விவரங்களைத் தாங்களாகவே இணையதளத்தில் பதிவிடும் "சுய கணக்கெடுப்பு" வசதி 2026 ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்கள் https://se.census.gov.in/ என்ற இணையதள முகவரியில், ஒரு குடும்பத்திற்கு ஒரேயொரு கைபேசி எண் வாயிலாகப் பதிவு செய்ய வேண்டும். இணையதளத்தில் கேட்கப்படும் 34 கேள்விகளுக்கு விடையளித்த பின், 12 இலக்க தனித்துவ அடையாள எண் (Census ID) குறுஞ்செய்தி மூலம் கைபேசிக்கு அனுப்பப்படும். பின்னர், தங்கள் பகுதிக்கு கணக்கெடுப்பாளர் நேரில் வரும்போது, பொதுமக்கள் இந்த 12 இலக்க அடையாள எண்ணை அவரிடம் தெரிவித்தால் போதுமானது.

மாவட்ட அளவிலான கட்டமைப்பு மற்றும் பொறுப்பு அதிகாரிகள் நியமனம்

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளைத் திட்டமிட்டபடி நடத்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாவட்ட முதன்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலராகவும், மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் மாநகராட்சி அளவிலான முதன்மை அலுவலராகவும் செயல்படுவர். மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளுக்கு வட்டாட்சியர்களும், நகராட்சிப் பகுதிகளுக்கு நகராட்சி ஆணையர்களும், பேரூராட்சிப் பகுதிகளுக்கு செயல் அலுவலர்களும், மாநகராட்சிப் பகுதிகளுக்கு மண்டல அலுவலர்களும் என மொத்தம் 14 பொறுப்பு அலுவலர்கள் (Charge Officers) நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தரவுகளைக் கையாள்வதற்காக 18 தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் 2 பல்பணி பணியாளர்கள் தற்காலிகமாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

களப்பணியாளர்களுக்கான முறையான பயிற்சிகள் மற்றும் கண்காணிப்பு

இப்பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 2 முதன்மைப் பயிற்சியாளர்கள் மற்றும் 60 களப்பணி பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மூலமாக, தோராயமாக 2,357 கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 363 மேற்பார்வையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குரிய பயிற்சி வகுப்புகள் 2026 ஜூலை 6 முதல் ஜூலை 16 வரை நடத்தப்பட்டு வருகின்றன. இப்பயிற்சி முடிந்தவுடன், இந்த 2,357 கணக்கெடுப்பாளர்களும் மாவட்டம் முழுவதும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்வர். இவர்களின் களப்பணியை 363 மேற்பார்வையாளர்கள் தீவிரமாகக் கண்காணிப்பார்கள்.

அரசு திட்டங்களுக்கு அடிப்படை: ஆட்சித்தலைவரின் முக்கிய வேண்டுகோள்

அரசின் அனைத்து எதிர்கால வளர்ச்சித் திட்டப் பணிகளும் இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே செயல்படுத்தப்பட உள்ளன. எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும், 2026 ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை கணக்கெடுப்பாளர்கள் தங்கள் இல்லங்களுக்கு வரும்பொழுது எவ்விதத் தவறுமின்றி சரியான விவரங்களை வழங்கி முழு ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தி. சினேகா வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், பொதுமக்களால் வழங்கப்படும் அனைத்துத் தனிநபர் விவரங்களும் முற்றிலும் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Kanchipuram Power Cut: காஞ்சிபுரம் ஆகஸ்ட் 5-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.?
Kanchipuram Power Cut: காஞ்சிபுரம் ஆகஸ்ட் 5-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.?
தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் காஞ்சிபுரம் ஆய்வு: செயின்ட்-கோபைன், ரெனால்ட் டஸ்டர் ஓட்டி அசத்தல்!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் காஞ்சிபுரம் ஆய்வு: செயின்ட்-கோபைன், ரெனால்ட் டஸ்டர் ஓட்டி அசத்தல்!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
சுங்குவார்சத்திரத்தில் கடும் போலிஸ் பாதுகாப்பு! திடீர் ஆய்வு நடத்திய முதலமைச்சர் விஜய்!
சுங்குவார்சத்திரத்தில் கடும் போலிஸ் பாதுகாப்பு! திடீர் ஆய்வு நடத்திய முதலமைச்சர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
Embed widget