திமுகவின் கொத்தடிமைகள்.. சூட்கேஸ் வாங்கிக்கொண்டு.. கோபத்தில் கொந்தளித்த வைகைச் செல்வன்
Admk: சூட்கேஸ் வாங்கிக்கொண்டு அடிமையாக இருப்பவர்களை மக்கள் ஓட ஓட விரட்டி அடிப்பார்கள் என காட்டமான பதில்.

Vaigaichelvan Press Meet: நீட் தேர்வுக்கு எதிரான கூட்டத்தை அதிமுக ஏன் புறக்கணித்தது என விளக்கம். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, முதலமைச்சர் வேந்தராகும் தீர்மானத்தை எதிர்த்தது திமுக எனவும் காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பரபரப்பு பேட்டி.
தண்ணீர் பந்தல் திறப்பு விழா
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் சோமசுந்தரம் மற்றும் வைகைச் செல்வன் ஆகியோர் திறந்து வைத்தனர். திறப்பு விழாவை முன்னிட்டு மோர், பழச்சாறு, இளநீர், நுங்கு உள்ளிட்டவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து போட்டி போட்டுக் கொண்டு, அதிமுக வழங்கிய பொருட்களை வாங்கிச் சென்றனர்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன் ?
முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது: நீட் தேர்வு அனைத்து கட்சி கூட்டம் நாடகம். இதற்கு கொத்தடிமைகளாக அடிமைகளாக கூட்டணி கட்சிகள் இருந்து கொண்டிருப்பது வேதனையாக ஒன்று. இப்படி கொத்தடிமைகளாக சூட்கேஸ் வாங்கிக்கொண்டு, அடிமைகளாக இருந்து கொண்டிருக்கிற திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி கட்சிகளை வருகின்ற தேர்தலில் ஓட ஓட விரட்டியடிப்பார்கள்.
பொய் பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி
நீட் தேர்வுக்கு ரகசியம் எங்களுக்குத் தான் தெரியும் என ஊர் ஊராக பிரச்சாரம் செய்து வந்தவர் உதயநிதி. சிறுபிள்ளைத்தனமாக குழந்தை தனமாக நீட் தேர்வு ரத்து செய்வோம் அதற்கான ரகசியம் எங்களுக்கு, தெரியும் என பொய்யான தகவலை தமிழ்நாடு முழுவதும் பரப்பி வந்தார். நீட் தேர்வு ரகசியம் என்னவென்று கேட்டால் இதுவரை பதில் கூறவில்லை என தெரிவித்தார்.
நீட் தேர்வு ரத்து செய்வதற்காக முயற்சி செய்கிறோம் என கூறிக் கொண்டிருக்கிறார்கள். 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை கூட்டணியுடன் வைத்திருக்கும் திமுக அழுத்தம் கொடுத்து இருக்கலாமே ?. நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்ற சூழல் நிலை இருந்தபோதும், 10 மாதங்களில் தேர்தல் வர உள்ள நிலையில் மக்கள் கேட்பார்கள் அதை ஏமாற்றுவதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த முடிவு செய்திருக்கிறார்கள்.
வேந்தர் தீர்மானத்தை எதிர்த்த திமுக
முதலமைச்சராக ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது, வேந்தராக முதலமைச்சரே இருக்க வேண்டும் என தீர்மானத்தைக் கொண்டு வந்த போது அதை திமுகவினர் எதிர்த்தனர். அப்போது ஒரு அரசியல் இப்போது ஒரு அரசியல் என வேடிக்கையான அரசியலை திமுக செய்து வருகிறது.
37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுமையாக, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவே இல்லை. இவர்களை தேர்ந்தெடுத்து மக்கள் அனுப்பி இருக்கிறார்கள். மக்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். நேர்மையற்ற அரசியல்தான் திமுக எப்போதும் செய்யும் அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்.





















