மேலும் அறிய

மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்கள்...மத்திய அமைச்சர் அனுராக் தாகூருக்கு எதிராக வினேஷ் போகத் பரபரப்பு குற்றச்சாட்டு..!

பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வீரர்கள், வீராங்கனைகள் வலியுறுத்தி வருகின்றனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரிஜ் பூஷனுக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தியது விளையாட்டு உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

டெல்லியை அலறவிடும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம்:

பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வீரர்கள், வீராங்கனைகள் வலியுறுத்தி வருகின்றனர். இச்சூழலில், ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூருக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

போராட்டத்திற்கு மத்தியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வினேஷ் போகத், "அதிகாரத்தையும் பதவியையும் துஷ்பிரயோகம் செய்யும் ஒருவரை எதிர்த்து நிற்பது மிகவும் கடினம். நாங்கள் ஜந்தர் மந்தரில் அமர்ந்து போராட்டம் நடத்துவதற்கு மூன்று நான்கு மாதங்களுக்கு முன், ஒரு அதிகாரியை சந்தித்தோம்.

பெண் விளையாட்டு வீரர்கள் எப்படி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள், மனரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதை எல்லாம் அவரிடம் சொல்லி எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில்தான் நாங்கள் தர்ணாவில் அமர்ந்தோம்" என்றார்.

மத்திய அமைச்சர் அனுராக் தாகூருக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டு:

மத்திய அமைச்சர் அனுராக் தாகூருக்கு எதிராக சரமாரி குற்றச்சாட்டு சுமத்திய வினேஷ் போகத், "மத்திய விளையாட்டுத் துறை அமைச்சருடன் (அனுராக் தாக்கூர்) பேசிய பிறகு எங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டோம். அனைத்து விளையாட்டு வீரர்களும் பாலியல் துன்புறுத்தல் பற்றி அவரிடம் கூறியிருந்தனர். 

ஒரு குழுவை உருவாக்கி, அந்த விஷயத்தை அங்கேயே ஒடுக்க அவர் முயற்சி செய்தார். அந்த நேரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களுக்கு நீதி வேண்டும்" என்றார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, "அவர் (பிரிஜ் பூசன்) ஒலிம்பிக்கிற்கு சில விதிகளை வகுத்துள்ளோம் எனவே இந்த விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்கிறார். முதலாவதாக, இது ஒலிம்பிக்கைப் பற்றியது அல்ல. இது பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரானது" என்றார்.

பெண் மல்யுத்த வீரர்களின் பாலியல் துன்புறுத்தல் மற்றும் சுரண்டல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் சிங் மீது டெல்லி போலீசார் வெள்ளிக்கிழமை இரண்டு எஃப்ஐஆர்களை பதிவு செய்தனர்.

மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராக வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க, இந்த சம்பவம் குறித்து விசாரணையை மேற்பார்வை செய்ய மத்திய அரசு ஒரு குழு அமைத்தது.

பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஒரு மாதத்திற்கு இந்த குழு விசாரிக்கும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார். அதன்படி, இந்த குழு, தனது அறிக்கையை கடந்த 5ஆம் தேதி, விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் சமர்பித்தது. ஆனால், ஆறு பேர் கொண்ட குழுவின் முடிவுகளை அமைச்சகம் இன்னும் வெளியிடவில்லை. 

தலைப்பு செய்திகள்

எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget