Viral video: நிஜமான சிங்கப்பெண் இவர் தானோ..! சிங்கங்கள் இவருக்கு செல்லப் பிராணி.. வைரல் வீடியோ..
சிங்கங்களை செல்லப் பிராணி போல் நினைத்து சிங்கத்துடன் நின்றுகொண்டிருக்கும் பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.
சிங்கப் பெண்ணே.. சிங்கப் பெண்ணே என்ற ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த பாடலை கேட்டு ரசித்திருப்போம். சிங்கம் போல வலிமையாகவும் தைரியமாகவும் பெண்கள் இருக்க வேண்டும்தான். ஆனால், இந்தச் செய்தியில் நாம் பார்க்கப் போகும் பெண் நிஜமாகவே சிங்கப் பெண்ணாக இருக்கிறார். அதாவது, செயினால் செல்லப் பிராணி போல் கட்டப்பட்டிருக்கும் சிங்கத்தின் அருகில் அந்தப் பெண் நின்று கொண்டிருக்கிறார். சிங்கங்களை செல்லப் பிராணி போல் வளர்க்கிறாரா அல்லது ஏதாவது விலங்கியல் பூங்காவில் இந்த வீடியோவை எடுத்தாரா என்று தெரியவில்லை.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. ஒரு சிங்கத்தின் தலையில் அவர் நாய்க்குட்டிக்கு தடவி கொடுப்பது போல் செல்லமாக இடது கையால் தடவிக் கொடுக்கிறார்.
அவருக்கு துளியும் அச்சம் இரு்பபதாக தெரியவில்லை.
இந்த வீடியோ இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.மேலும், வீடியோவிற்கு 25ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். பலர் கமென்ட்டும் செய்துள்ளனர். பலர் இந்த வீடியோவுக்கு கீழே உள்ள கமென்ட் செக்ஷனில் கோபத்தை பதிவு செய்துள்ளனர்.
ஒரு நெட்டிசன், "எப்படி ஒருவர் சங்கிலியால் சிங்கத்தை கட்டிப்போட முடியும். இது சட்டவிரோதமானது. சிங்கங்கள் வீட்டில் வளர்க்கு செல்லப் பிராணி கிடையாது" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்றொரு நெட்டிசன், "எப்படி இவர் வீட்டில் சிங்கங்களை செல்லப் பிராணி போல் வளர்க்க முடியும்? அவை திறந்த வெளியில் சுதந்திரமாக விடப்பட வேண்டும். நாயைப் போன்று சங்கிலியால் சிங்கங்களைக் கட்டிப் போட கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் பெண் யார்? என்பது குறித்து விவரம் தெரியவில்லை.
View this post on Instagram
முன்னதாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரேபரேலியில் மதுபானக் கடை ஒன்றில் இருந்த பாட்டிலை எடுத்து குரங்கு ஒன்று பீர் அருந்தும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.
எங்களது கடையில் இருந்து பீர் பாட்டில்களை குரங்கு ஒன்று திருடிச் செல்வதாகவும், எங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து பீர் பாட்டிலை குரங்கு பறித்துச் செல்வதாகவும் மாவட்ட கலால் துறை அதிகாரியிடம் புகார் மனு அளித்தும் குரங்கு தனது சேட்டையை தொடர்ந்து செய்தபடியே இருக்கிறது.
இதுதொடர்பாக அந்தத் துறை அதிகாரிகள் கூறுகையில், "சம்பந்தப்பட்ட குரங்கை பிடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று தெரிவித்து இருந்தனர்.
Video of monkey drinking beer goes viral pic.twitter.com/YOsWgp2WHE
— Report1BharatEnglish (@Report1BharatEn) October 31, 2022