No means No..! "கல்யாணம் ஆனா என்ன? ஆகலைன்னா என்ன? கட்டாயம் என்றால் ஜெயில்தான்" - டெல்லி உயர்நீதிமன்றம்!
"ஒரு முறை விருப்பமில்லாத உடலுறவு செய்தால் கூட அந்த நபரை 10 வருடங்கள் சிறையில் வைத்திருக்கலாம் எனும் அழுத்தத்தை திருமணம் ஆன தம்பதிகளுக்கு கொடுக்கக்கூடாது என்று சட்டம் கருதுகிறது"
ஒரு பெண்ணுக்கு பாலியல் சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கான உரிமை மற்றும் 'இல்லை என்று சொல்லும் உரிமை' உள்ளது என்பதில் சமரசம் செய்ய முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
“கணவன் மனைவியுடன் விருப்பமில்லாமல் உடலுறவு கொள்வதை கற்பழிப்பு என்று கூறலாம். அதற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். "ஒரு பெண்ணுக்கு பாலியல் சுயாட்சி, உடல் ஒருமைப்பாடு மற்றும் 'இல்லை' என்று சொல்ல உரிமை உள்ளது என்பதில் எந்த சமரசமும் இருக்க முடியாது. கணவனுக்கு அவள் விருப்பமில்லையென்றால் அவளை பாலியல் உறவுக்கு வற்புறுத்துவதற்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால் 376 இந்த கீழ் வரும் திருமண வாழ்வில் பாலியல் துன்புறுத்தலுக்கான சட்டம் அதனை மழுங்கடிக்கிறது," என்று நீதிபதி சி ஹரி ஷங்கர் ஒரு சில மனுக்களின் விசாரணையின் போது குறிப்பிட்டார். இது சட்ட விதிவிலக்கை எதிர்த்து தங்கள் மனைவிகள் சம்மதிக்காமல் உடலுறவு கொள்ளும் ஆண்களைப் பாதுகாக்கிறது எனவும் தெரிவித்தார்.
இந்த வழக்கின் வாதங்கள் நீதிபதிகள் ராஜீவ் ஷக்தர் மற்றும் நீதிபதி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. இந்த அவதானிப்புகள் முதன்மையானவை என்றும், வழக்கு விசாரணைகள் முன்னேறும்போது அவை மாறக்கூடும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
வன்கொடுமை என்றால், அது தண்டிக்கப்பட வேண்டும் என்பதைக் தெளிவாக கூறிய நீதிபதி ஷங்கர், திருமணம் ஆன தம்பதியினர் எனும்போது "சூழ்நிலையை" ஏற்றுக்கொள்கிறது சட்டம் என்றும், விதிவிலக்கைப் பயன்படுத்துவதற்கான வழக்கு உள்ளதா என்பதை நீதிமன்றம் பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், IPC பிரிவு 375 கற்பழிப்பை "மிக மிக பரந்த முறையில்" வரையறுக்கிறது என்று நீதிபதி கூறினார். “ஒரு முறை விருப்பமில்லாத உடலுறவு செய்தால் கூட அந்த நபரை 10 வருடங்கள் சிறையில் வைத்திருக்கலாம் எனும் அழுத்தத்தை திருமணம் ஆன தம்பதிகளுக்கு கொடுக்கக்கூடாது என்று சட்டம் கருதுகிறது. அதனால்தான் நான் தண்டனையைக் கொண்டு வந்தேன். விதிவிலக்கை முற்றிலுமாக களைய வேண்டும். ஒருமுறை செய்தாலும் பாலியல் குற்றவாளி என்றுதான் சொல்லப் வேண்டும். ரேப்பிஸ்ட என்று அழைக்கப்படுவார்கள். 10 வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும்” என்று நீதிபதி சங்கர் கூறினார்.
"திருமணம் செய்து கொண்டவர்கள் தாம்பத்ய உறவை எதிர்பார்க்கலாம் என்றும், திருமணம் செய்யாதவர்கள் தாம்பத்ய உறவை எதிர்பார்க்கக்கூடாது என்றும் சட்டம் சொல்கிறது. எனவே, திருமணம் செய்துகொள்வதிலும், திருமணம் செய்யாதபோதும் ஒரு வெளிப்படையான வேறுபாடு உள்ளது. முதன்மையாக, 375வது பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள விதிவிலக்குகளில் இந்த வேறுபாடு ஒரு பெரும் பங்கைக் கொண்டுள்ளது" என்று நீதிபதி சங்கர் கூறினார்.
முன்னதாக அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் மற்றும் ஆர்ஐடி அறக்கட்டளை சார்பில் வழக்கறிஞர் கருணா நுண்டி வாதாடினார்.
திருமண பாலியல் வன்கொடுமையை பாதுகாக்கும் சட்ட விதிவிலக்கு 14வது பிரிவை மீறுவதாகவும், திருமணமான பெண்ணின் கண்ணியம், சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட மற்றும் பாலியல் சுயாட்சிக்கான உரிமையை மீறுவதாகவும் நுண்டி வாதிட்டார்.