Punjab: பேஸ்புக்கில் ஃபேக் ஐடி! தோழியின் படத்தை மார்ஃபிங் செய்து பழிவாங்கிய பெண்!
குற்றம் சாட்டப்பட்ட பெண் மீது தகவல் மற்றும் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 66 பி, 66 சி மற்றும் 67 ஏ ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைதளத்தில் போலிக் கணக்கு உருவாக்கி அதில் தனது தோழியின் மார்ஃபிங் செய்த படங்களையும் மோசமான கருத்துகளையும் பகிர்ந்த பெண் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சைபர் க்ரைம்
பஞ்சாப் மாநிலம், லுதியானாவைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர், முன்னதாக தான் ஃபேஸ்புக்கில் புகைப்படம் பகிர்ந்த போது ரீத் மெஹ்ரா (ப்ரீத்) என்ற ஐடி கொண்ட பெண் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை கமெண்டில் பதுவிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சில நாள்களில் தன் பகுதியில் வசிக்கும் ஆண் ஒருவருடைய புகைப்படத்துடன் தன் புகைப்படத்தை மார்ஃப் செய்து அதே அடி பகிர்ந்த நிலையில் அப்பெண் மன உளைச்சலுக்கு ஆகியுள்ளார்.
மேலும் படிக்க: ஒரே கல்லில் இரண்டு மாங்கா... இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் செக்...பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்கிய சீனா
குற்றத்தில் ஈடுபட்ட பெண்ணின் தோழி
தொடர்ந்து பாதிக்கப்பட்ட அப்பெண் கடந்த மார்ச் 28ஆம் தேதி காவல்துறையில் இது குறித்து புகார் அளித்தார். இந்நிலையில், இது பற்றி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், புகார் அளித்த பெண்ணின் தோழி ஒருவர் தான் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளார் எனும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்பெண் பத்திண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பர்மிந்தர் கவுர் பகுதியைச் சேர்ந்தவர் என காவல் துறையினர் தெரிவித்துள்ள நிலையில், மூன்று மாத நீண்ட விசாரணைக்குப் பிறகு இச்சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கை முன்னதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் மீது தகவல் மற்றும் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 66 பி, 66 சி மற்றும் 67 ஏ ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அந்தரங்க உறுப்பில் இருந்து எடுக்கப்பட்ட கேபிள் வயர்.. ஷாக் ஆன மருத்துவர்கள்.. இளைஞரின் நிலை என்ன?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்