மேலும் அறிய

Black Hole : `ஒரு நொடியில் ஒரு பூமியை இழுக்கும் வேகம்!’ - அதிவேகமாக வளரும் மிகப்பெரிய கருந்துளையைக் கண்டுபிடித்த ஆய்வாளர்கள்!

விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டதிலேயே அதிவேகமாக வளரும் கருந்துளை ஒன்றை வானியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு நொடியில் ஒரு பூமியை உள்ளிழுக்கும் வேகத்தில் வளர்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டதிலேயே அதிக வேகமாக வளரும் கருந்துளை ஒன்றை வானியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கருந்துளை மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும், ஒரு நொடியில் ஒரு பூமியை உள்ளிழுக்கும் வேகத்தில் வளர்வதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள் இதனைக் கண்டுபிடித்துள்ளதோடு, இதனை `மிகப் பெரியது.. வைக்கோல் போரில் எதிர்பாராத விதமாக விழுந்து ஊசியைப் போன்றது’ எனவும் வானியல் ஆய்வாளர்கள் வர்ணித்துள்ளனர். 

இந்தக் கருந்துளை நமது பிரபஞ்சத்தில் இருந்து பார்க்கும் போது அனைத்து ஒளியை விட சுமார் 7 ஆயிரம் மடங்கு வெளிச்சத்தை வெளிப்படுத்துவதால் உலகம் முழுவதும் இருக்கும் பல ஆய்வாளர்களும் இதனைக் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரே வகையான இரட்டை நட்சத்திரங்களைத் தேடும் ஸ்கைமேப்பர் தெற்கு சர்வே மேற்கொள்ளப்பட்ட போது, இந்தக் கருந்துளையின் வண்ணங்கள் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்த ஆய்வுகள் ஆஸ்திரேலிய வானியல் சொசைட்டியின் ஆய்விதழில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 

Black Hole : `ஒரு நொடியில் ஒரு பூமியை இழுக்கும் வேகம்!’ - அதிவேகமாக வளரும் மிகப்பெரிய கருந்துளையைக் கண்டுபிடித்த ஆய்வாளர்கள்!

ஆஸ்திரேலியா தேசியப் பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆய்வாளர் முனைவர் க்றிஸ்டோபர் ஓன்கென் இதுகுறித்து கூறிய போது, `இது போன்ற விண்வெளிப் பொருள்களுக்காக சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வானியல் ஆய்வாளர்கள் தேடி வருகின்றனர். பலம் குறைந்த ஆயிரக்கணக்கான கருந்துளைகளையும் கண்டுள்ளனர். எனினும், இத்தகைய வெளிச்சம் கொண்ட கருந்துளை நம் அனைவரின் பார்வையில் இருந்தும் தப்பித்துள்ளது’ எனக் கூறியுள்ளார். 

இரண்டு பெரிய கேலக்ஸிகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதால் இதுபோன்ற பெரிய அளவிலான கருந்துளை உருவாகியுள்ளது. அதிக புவியீர்ப்பு விசை கொண்ட நட்சத்திரங்கள் மரணிக்கும் போது, அவை ஒரு சிறியளவிலான வெளிக்குள் செல்வதால் கருந்துளை உருவாகிறது. மேலும், கருந்துளைகளும் கண்ணுக்குத் தெரியாதவாறு இருப்பதோடு, அதனைச் சுற்றியுள்ள வெளியில் கருந்துளையால் உறிஞ்சப்படும் வெளிச்சம் மூலமாக அது கண்டுபிடிக்கப்படுகிறது. 

ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள இந்த கருந்துளை நமது பால்வெளியில் இருந்து கருந்துளையை விட சுமார் 500 மடங்கு பெரியது. மேலும், இந்தக் கருந்துளையின் அளவைக் குறித்து பார்க்கும் போது, நமது பால்வெளியில் இருக்கும் அனைத்து கிரகங்களும் இதன் நிகழ்வுக் கோட்டில் மொத்தமாக பொருந்தும் அளவு பெரியது. எனவே இதில் மோதும் எதுவும் தப்பாது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2024 SRH vs MI Match Highlights: மும்பைக்கு சங்கு ஊதிய ஹைதராபாத்; 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

IPL Records: வெறித்தனம்; ஒத்த போட்டியில் மொத்த சாதனைகளையும் ஊதித் தள்ளிய ஹைதராபாத் - மும்பை பேட்ஸ்மேன்கள்!

Highest Score in IPL History: அம்மாடியோவ்! 277 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

Fastest 50 in IPL: ஐ.பி.எல் வான வேடிக்கை...சிக்ஸர் மழையில் ஹைதராபாத்! டிராவிஸ் ஹெட் - அபிஷேசக் சர்மா அசத்தல்!

for smartphones
and tablets

வீடியோ

PTR Vs Annamalai : ”என்னது MLA QUOTA-வா” அண்ணாமலைக்கு PTR பதிலடி! சரமாரி கேள்விSudha Ramakrishnan : அன்று சோனியாவை எதிர்த்தவருக்கு சீட் கொடுத்த ராகுல்! யார் இந்த சுதா ராமகிருஷ்ணன்!Sowmiya Anbumani : ”WIN பண்ணிருவோம்” ப்ளான் என்ன? சௌமியா அன்புமணிTRB Raja : பரிசாக வந்த ஆட்டுக்குட்டி’’பிரியாணிக்கு தயாராகுங்க!’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2024 SRH vs MI Match Highlights: மும்பைக்கு சங்கு ஊதிய ஹைதராபாத்; 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
IPL 2024 SRH vs MI Match Highlights: மும்பைக்கு சங்கு ஊதிய ஹைதராபாத்; 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
IPL Records: வெறித்தனம்; ஒத்த போட்டியில் மொத்த சாதனைகளையும் ஊதித் தள்ளிய ஹைதராபாத் - மும்பை பேட்ஸ்மேன்கள்!
IPL Records: வெறித்தனம்; ஒத்த போட்டியில் மொத்த சாதனைகளையும் ஊதித் தள்ளிய ஹைதராபாத் - மும்பை பேட்ஸ்மேன்கள்!
Highest Score in IPL History: அம்மாடியோவ்! 277 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
Highest Score in IPL History: அம்மாடியோவ்! 277 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
Fastest 50 in IPL: ஐ.பி.எல் வான வேடிக்கை...சிக்ஸர் மழையில் ஹைதராபாத்! டிராவிஸ் ஹெட் - அபிஷேசக் சர்மா அசத்தல்!
Fastest 50 in IPL: ஐ.பி.எல் வான வேடிக்கை...சிக்ஸர் மழையில் ஹைதராபாத்! டிராவிஸ் ஹெட் - அபிஷேசக் சர்மா அசத்தல்!
IPL 2024 MI vs SRH: 7 ஓவர்கள்...102 ரன்கள்! மும்பை அணியின் பந்து வீச்சை பறக்கவிடும் சன்ரைசர்ஸ்!

Pot Symbol: விசிகவுக்கு பானை சின்னம் வழங்க மறுப்பு.. அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!
விசிகவுக்கு பானை சின்னம் வழங்க மறுப்பு.. அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!
Tamilisai Assets: 200 பவுன் நகை, கையிருப்பு: முன்னாள் ஆளுநர், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சொத்து மதிப்பு இவ்வளவா?

Annamalai Assets: 51 ஏக்கர் நிலம், பேங்க் பேலன்ஸ்: கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை சொத்து மதிப்பு தெரியுமா?

Embed widget