மேலும் அறிய

August Month Changes: சிலிண்டர் விலை, வங்கி விடுமுறை.. ஆகஸ்ட் மாதத்தில் கொண்டு வரப்படும் அதிரடி மாற்றங்கள் என்ன? முழு விவரம்..

ஆகஸ்ட் மாதத்தில் வங்கி விடுமுறை தொடங்கி சிலிண்டர் விலை வரை மாற்றங்கள் ஏற்படும் நிலையில், அவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஆகஸ்ட் மாதம் பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளது. ஆகஸ்ட் மாதத்திலிருந்து பல்வேறு முக்கிய அம்சங்கள் அமலுக்கு வருகிறது. பொது மக்கள் அனைவரும் இந்த மாற்றங்கள் குறித்து அறிந்து கொள்வது அவசியம்.

பாங்க் ஆஃப் பரோடாவில் கொண்டுவரப்படும் அதிரடி மாற்றம்: 

முதலில் பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் காசோலை தொடர்பாக முக்கிய விதிகள் மாற்றப்பட உள்ளது. அதாவது பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் ரூ 5 லட்சம் அல்லது அதற்கு அதிகமாக காசோலை செலுத்த வேண்டும் என்றால் அதற்கு நேர்மறை ஊதிய முறை அவசியமாக்கப்பட்டுள்ளது. அதாவது இனி ஒருவர் அதிக தொகை கொண்ட காசோலைகளை வங்கியில் அளிக்கும் முன் வங்கியில் நேரடியாக தகவல் வழங்க வேண்டும். பண மோசடி மற்றும் தவறான பணப்பரிவர்த்தனையை தடுக்க இந்த நடவடிக்கை பாங்க் ஆஃப் பரோடா கொண்டுவந்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் வங்கி விடுமுறை: 

அதேபோல் ஆக்ஸ்ட் மாதம் பல பண்டிகைகள் நாடு முழுவது கொண்டாடப்பட உள்ளது. ஆகஸ்ட் மாதம் மொத்தமாக 18 நாட்கள்  வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 15 – சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவது வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி பார்சி புத்தாண்டை முன்னிட்டு மகாராஷ்டிராவில் வங்கிகள் செயல்படாது. தமிழ்நாட்டில் மொஹரம், ஜென்மாஷ்டமி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் வங்கிகள் செயல்படாது. அதுமட்டுமின்றி இரண்டாம் மற்றும் நான்காவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் செயல்படாது.

சிலிண்டர் விலையில் மாற்றம்: 

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மக்கள் பயன்படுத்தும் வீட்டு உபயோக மற்றும் வணிக உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றங்கள் செய்யப்படும். டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை  ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, எல்பிஜி, சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி சிலிண்டர் ஆகியவற்றின் விலைகள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் அரசால் நிர்ணயிக்கப்படும். கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு, உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலை நிலையாக இருந்து வருகிறது. அவ்வப்போது வணிக சிலிண்டர்களின் விலை மட்டுமே அவ்வபோது மாற்றமடைந்து வருகிறது.

வருமான வரி தாக்கல்: 

வருமான வரி தாக்கலுக்கு ஜூலை 31 ஆம் தேதி தான் கடைசி நாள். ஆகஸ்ட் மாதம் வருமான வரி தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும். ரூ. 5 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் இருந்தால் 5 ஆயிரம் அபராதமும், ரூ. 5 லட்சத்துக்கு கீழ் இருந்தால் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இருக்கு.!மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெறும் மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
Embed widget