"எதுக்கு இந்த பெயரை வச்சீங்க?” சிங்கத்திற்கு சீதா, அக்பர் பெயர் - கொல்கத்தா நீதிமன்றம் சரமாரி கேள்வி!
சீதா, அக்பர் என பெயரிடப்பட்ட சிங்கங்களின் பெயர்களை மாற்ற மேற்கு வங்க மாநில அரசுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
Kolkta High Court: சீதா, அக்பர் என பெயரிடப்பட்ட சிங்கங்களின் பெயர்களை மாற்ற மேற்கு வங்க மாநில அரசுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
சர்ச்யைை கிளப்பிய விஷ்வ இந்து பரிஷத்:
மேற்கு வங்க மாநிலம் உயிரியல் பூங்காவில் பெண் சிங்கத்திற் 'சீதா' என்றும் ஆண் சிங்கத்திற்கு 'அக்பர்' என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விஷ்வ இந்து பரிஷத் எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவில், "உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்துக்களும் ராமரின் மனைவியான சீதையை தெய்வமாக கருதி வழிபட்டு வருகின்றனர். அந்த பெயரை சிங்கத்திற்கு வைத்திருப்பதை அறிந்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மன வேதனை அடைந்துள்ளது. இது, தெய்வ நிந்தனைக்கு இணையான செயலாகும். அனைத்து இந்துக்களின் மத நம்பிக்கையின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
சிங்கங்களுக்கு மாநில வனத்துறை பெயர் சூட்டியுள்ளது. மேலும், 'அக்பர்' சிங்கத்துடன் 'சீதா' சிங்கத்தை வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயலாகும். சிங்கத்தின் பெயரை "சீதா" என்பதிலிருந்து வேறு ஏதேனும் பெயர் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து மதத்துடன் தொடர்பில்லாத பெயரைக் கொண்டு விலங்கின் பெயரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என விஷ்வ இந்து பரிஷத் குறிப்பிட்டுள்ளது.
அக்பர் மற்றும் சீதா பெயர்களை ஏன் வைக்க வேண்டும்?
இந்த மனு கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சவுகதா பட்டாச்சார்யா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ”செல்லப் பிராணிகளுக்கு கடவுள் பெயர்களை சூட்டலாமா? நீங்களே உங்கள் செல்லப் பிராணிக்கு ஏதாவது இந்து அல்லது இஸ்லாமிய பெயர்களை சூட்டுவீர்களா?
ஒரு விலங்குக்கு சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களை வைக்க முடியுமா? சிங்கத்திற்கு அக்பரின் பெயரை வைப்பதை நான் எதிர்க்கிறேன். அவர் ஒரு திறமையான, வெற்றிகரமான மற்றும் மதச்சார்பற்ற முகலாய பேரரசராக இருந்தார். அந்த விலங்குகளுக்கு வேறு பெயர்களை வைத்திருக்கலாம். அக்பர் மற்றும் சீதா பெயர்களை ஏன் வைக்க வேண்டும்?
மத தெய்வம் அல்லது வரலாற்று ரீதியாக மதிக்கப்படும் நபர்களின் பெயரை சூட்டுவது நல்லதல்ல. நீங்கள் ஏன் சிங்கத்திற்கு சீதா மற்றும் அக்பரின் பெயரை வைத்து சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும்? அரசு ஏற்கனவே பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இந்த சர்ச்சை தவிர்க்கப்படக்கூடிய ஒன்று.
தயவுசெய்து சர்ச்சை கூறிய பெயர்களை தவிர்க்க வேண்டும். இந்த விலங்குகளுக்கு வேறு பெயர்களை வைக்க வேண்டும். தயவுசெய்து எந்த ஒரு விலங்குக்கும் மதம் சார்ந்த பெயர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் போன்றவர்களின் பெயர்களை வைக்க வேண்டாம். பொதுவாக, சமூகத்தில் மரியாதைக்குரியவர்களின் பெயர்களை வைப்பதை தவிர்க்க வேண்டும்” என்று கொல்கத்தா நீதிமன்ற நீதிபதி சவுகதா பட்டாச்சார்யா தெரிவித்தார்.