Sputnik: ஸ்ட்புட்னிக் தொடர்பாக சில சந்தேகங்களும், பதில்களும்!
ஸ்புட்னிக் தொடர்பாக பல கேள்விகள் மக்களிடையே எழுந்துள்ளது. அதற்கெல்லாம் விடையளிக்கிறது இந்த கட்டுரை.
கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக ரஷ்யா தயாரித்துள்ள தடுப்பூசி தான் ஸ்புட்னிக் வி. ரஷ்ய நேரடி முதலீட்டு நிறுவனம் இந்தியாவில் தங்கள் பங்குதாரர்களான டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகத்தின் மூலம் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை விநியோகம் செய்ய முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸ் சமீபத்தில் ஐதராபாத்தில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் ஸ்புட்னிக் தொடர்பாக பல கேள்விகள் மக்களிடையே எழுந்துள்ளது. அதற்கெல்லாம் விடையளிக்கிறது இந்த கட்டுரை.
ஸ்புட்னிக் விலை இடத்திற்கு இடம் மாறுபடுமா? ஒரே விலையா?
ஸ்புட்னிக் விலையை பொருத்தவரை வரிகள் சேர்த்து ரூ.995.10ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய தயாரிப்பில் ஸ்புட்னிக் வந்தால் விலை குறையலாம் எனக் கூறப்படுகிறது.
இந்திய தயாரிப்பில் ஸ்புட்னிக் வந்தால் எவ்வளவு விலை குறையும்?
விலை குறைப்பு தொடர்பாக இதுவரை அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. ஆனால் இந்திய தயாரிப்பின் கீழ் வந்தால் நிச்சயம் விலை குறையும் என்றே தெரிகிறது.
இந்தியாவில் எங்கே ஸ்புட்னிக் முதலில் கிடைக்கும்?
ஸ்புட்னிக்கை 18டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதால் இந்தியாவில் 35 நகரங்களில் முதலில் கிடைக்கும்.
மற்ற இடங்களில் எப்போது கிடைக்கும்?
ஸ்புட்னிக்கை 2-8 டிகிரி செல்சியஸில் பாதுகாக்க சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த சோதனைகள் வெற்றியடைந்தால் பல இடங்களிலும் எளிதில் கிடைக்கும்.
இது கோவின் சிஸ்டத்தின் கீழ் வருமா?
ஆமாம். இந்த தடுப்பூசி மூன்றாவது ஆப்ஷனாக கோவின் மற்றும் ஆரோக்கிய சேது செயலின் கீழ் வரும்.
எந்த அளவுக்கு ஸ்புட்னிக் வேலை செய்கிறது?
ஸ்புட்னிக் 91.6% அளவு சரியாக வேலை செய்கிறது. 60 நாடுகளில் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த தடுப்பூசியை பெற்றுள்ளனர். உலக அளவிலான கணக்கின்படி, ஸ்புட்னிக் பயன்பாட்டு ஏற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்புட்னிக் ஏன் இதுவரை உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படவில்லை?
அதற்கான வேலைகள் நடந்துவருகின்றன. வரும் சில வாரங்களில் அங்கீகரிக்கப்படும் என தெரிகிறது
ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி என்றால் என்ன?
ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி என்றால் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸ் ஆகும். இது 79.4% வேலை செய்கிறது. இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் துரிதமாக நோயெதிர்ப்பு சக்தியை வழங்க இந்த தடுப்பூசி உதவும்
ஸ்புட்னிக் லைட் எப்போது கிடைக்கும்? விலை என்ன?
மிக விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் எனத் தெரிகிறது. ஸ்புட்னிக் வி-ன் விலையைவிட குறைவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விலை குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை