ஒரு பெண் கொடுத்த யோசனை… முழங்கால் வலி நீங்கியது… யாத்திரையின்போது ராகுல் பகிர்ந்த விஷயம்!
அந்த லெட்டரை படித்த ராகுல் காந்தி தனக்கு முழங்காலில் பிரச்சனை இருப்பது உங்களுக்குத் தெரியும், அதனால் நான் நடக்கும்போது சில சமயங்களில் எனக்கு மிகவும் வலிக்கிறது என்பதை குறிப்பிட்டார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்ராவின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, ஒரு பெண் தந்த குறிப்பு, முழங்கால் வலியைப் போக்க உதவியதாக ஒரு சம்பவத்தை விவரித்தார்.
பாரத் ஜோடோ யாத்திரை
2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி பாரத் ஜோடோ யாத்திரை, அதாவது இந்திய ஒருமைப்பாட்டு பேரணியை மேற்கொண்டு வருகிறது. குமரி முதல் காஷ்மீர் வரை என்று திட்டமிடப்பட்டுள்ள இந்த பயணம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் துவங்கியது. இந்த பாதயாத்திரையை ராகுல் காந்தி கடந்த 7ந் தேதி தொடங்கினார். இந்த யாத்திரை தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை முடித்துள்ளது. அதனை தொடர்ந்து இன்று முதல் கர்நாடகத்தில் துவங்கி நடைபெற உள்ளது.
முழங்கால் வலி
இந்த யாத்திரையின்போது ராகுல் காந்தி, மற்ற தலைவர்களுடன் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்த போது, ஒரு பெண் அவரிடம் என்று ஒரு கடிதத்தை கொடுத்தார். அந்த லெட்டரை படித்த ராகுல் காந்தி தனக்கு முழங்காலில் பிரச்சினை இருப்பது உங்களுக்குத் தெரியும், அதனால் நான் நடக்கும்போது சில சமயங்களில் எனக்கு மிகவும் வலிக்கிறது என்பதை குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்: எல்லாமே பிரமாண்டம்.. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா? பொன்னியின் செல்வன் ட்விட்டர் விமர்சனம் இதோ!
சிரமத்தில் இருந்து வெளிவருவது
மேலும் பேசிய அவர், "எனக்கு சிரமமாக இருக்கும்போதெல்லாம் நான் கவனித்தேன், திடீரென்று யாரோ வருவதைக் பார்க்கிறேன், ஏதாவது செய்கிறேன் அல்லது சிரமத்தை நீக்குவதற்காக என்னிடமே ஏதாவது சொல்லிக்கொள்கிறேன்", என்றார்.
Rahul ji narrating how inspite of having knee problems and being in bad pain, it’s the love and compassion of strangers that is driving him through!#bharatjodoyatra pic.twitter.com/df92ZvQ0s1
— Dr Pooja Tripathi (@Pooja_Tripathii) September 29, 2022
எனக்கு உதவ யாராவது வருகிறார்கள்
அதோடு அவர் ஒரு உதாரணம் கூறினார், "உதாரணமாக, நேற்று நான் மிகவும் கடினமான நேரத்தை அனுபவித்தேன், பின்னர் திடீரென்று ஒரு பெண் வந்து ஒரு கடிதத்தை கொடுத்தாள். அந்தக் கடிதத்தில், "கடினமான நேரங்களை, எளிதாக எதிர்கொள்ள வேண்டும்" என்று தலைப்பு இடப்பட்டு இருந்தது. நான் எனது கஷ்டத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன், அப்போது அவர் எனக்கு ஒரு கடிதத்தை கொடுத்தார். அதில் கஷ்டங்கள் எளிதாக பார்க்கவேண்டும் என்று எழுதி இருந்தது. இப்போது கொஞ்சம் சிறப்பாக உணர்கிறேன். என் கடினமான நேரத்தில் யாராவது வந்து எனக்கு உதவுகிறார்கள்", என்றார்.