Watch Video: கார்ல ஏறுப்பா.. வேண்டாம் நான் ஆர்மில சேரப்போறேன்.. ஓடிக்கொண்டே பேசிய இளைஞர்.. வாழ்த்து சொல்லும் இணைய உலகம்..!
உத்தரகாண்ட் மாநிலத்தில் நள்ளிரவு நேரத்தில் ஓடும் இளைஞர் ஒருவரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் நள்ளிரவு நேரத்தில் ஓடும் இளைஞர் ஒருவரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை இயக்குநர் வினோத் கப்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், “ நள்ளிரவில் காரில் சென்ற வினோத் கப்ரி, ஒரு சிறுவன் ஓடிக்கொண்டிருப்பதை பார்க்கிறார். அதனைத் தொடர்ந்து அவர்களுக்குள் நடந்த சுவாரஸ்சியமான உரையாடலை இங்கு பார்க்கலாம்..
வினோத் அந்தச் சிறுவனிடம்: நான் உன்னை காரில் வீட்டில் கொண்டு விடுகிறேன்
பிரதீப்: இல்லை வேண்டாம் நான் ஓடியே வீட்டிற்கு செல்கிறேன்.
வினோத்: சரி இருக்கட்டும், அப்படியென்றால் நீ ஏன் ஓடுகிறாய்
பிரதீப்: ஒவ்வொரு முறையும் வீட்டிற்கு நான் இப்படித்தான் ஓடுவேன்.
வினோத்: நீ எங்கே வேலை செய்கிறாய்
பிரதீப்: மெக்டோனாலில் வேலை செய்கிறேன்.
This is PURE GOLD❤️❤️
— Vinod Kapri (@vinodkapri) March 20, 2022
नोएडा की सड़क पर कल रात 12 बजे मुझे ये लड़का कंधे पर बैग टांगें बहुत तेज़ दौड़ता नज़र आया
मैंने सोचा
किसी परेशानी में होगा , लिफ़्ट देनी चाहिए
बार बार लिफ़्ट का ऑफ़र किया पर इसने मना कर दिया
वजह सुनेंगे तो आपको इस बच्चे से प्यार हो जाएगा ❤️😊 pic.twitter.com/kjBcLS5CQu
வினோத்: என்னுடைய காரில் உன்னை கொண்டு விடுகிறேன்.
பிரதீப்: வேண்டாம் இதை விட்டால் எனக்கு ஓடுவதற்கு நேரம் இல்லை.
வினோத்: சரி நீ எதற்காக ஓடுகிறாய்
பிரதீப்: நான் ராணுவத்தில் சேருவதற்காக..
வினோத்: சரி உன்னுடைய பெயர்
பிரதீப்: பிரதீப் மெஹ்ரா
வினோத்: நீ எங்கிருந்து வருகிறாய்
பிரதீப்: உத்தரகாண்ட் அல்மோரோ நகரில் இருந்து வருகிறேன்
வினோத் : ஏன் நீ காலையில் ஓடுவதில்லை.
பிரதீப்: காலையில் சமைத்து விட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் என்னால் காலையில் ஓட முடியாது.
வினோத்: உன்னுடைய வயது என்ன?
பிரதீப்: வயது 19
வினோத்: உன்னுடைய பெற்றோர்..?
பிரதீப்: எனது அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். எனது சகோதரருடன் நான் தங்கியிருக்கிறேன்.
வினோத்: இந்த வீடியோ வைரல் வீடியோ.
பிரதீப்: யார் என்னை அங்கிகரிக்க போறா
வினோத்: வைரல் அப்படின்னா என்னனு தெரியுமா?
பிரதீப்: பராவாயில்லை நான் ஏதும் தவறாக சொல்லவில்லையே..
வினோத்: சரி எத்தனை கிலோமீட்டர் நீ ஓடி வருகிறாய்..
பிரதீப்: 10 கிலோமீட்டர்..
வினோத்: சரி எங்கே சாப்பிடுவாய்
பிரதீப்: நான் வீட்டிற்குச் சென்று சமைத்து சாப்பிடுவேன்.
வினோத்: சரி என்னுடன் வந்து சாப்பிடு வா..
பிரதீப்:இல்லை என்னுடைய சகோதரர் காத்துக்கொண்டிருப்பான்
வினோத்: உன் சகோதரன் சமைக்க மாட்டாரா?
பிரதீப்: அவன் நைட் டூட்டி பார்க்கிறான்.
வினோத் : நான் உன்னை வீட்ல டிராப் பண்ணுறேனே?
பிரதீப் : இல்ல அப்படி பண்ணா என் பயிற்சி பாதிக்கப்படும் வேண்டாம்
வினோத்: ஆல்தி பெஸ்ட்
இந்த உரையாடல் கலந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.