Visakhapatnam Gas Leak:தொழிற்சாலை எரிவாயு கசிவு: சுமார் 80 பெண்கள் மருத்துவமனையில் அனுமதி!
விசாகப்பட்டினத்தில் தனியார் ஆலையில் ஏற்பட்ட எரிவாயு கசிவால், அங்கு வேலை செய்யும் சுமார் 80 பெண்கள் வாந்தி, மயக்கம், கடும் உடல் நல பாதிப்புக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த தனியார் ரசாயன ஆலை ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு கசிவால் 80 பெண்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் கடும் உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாம் முறையாக எரிவாயு கசிவு
விசாகப்பட்டினம் அச்சுதாபுரத்தில் உள்ள போரஸ் தனியார் நிறுவனம் எனும் கால்நடை மருந்து நிறுவனத்தின் தொழிற்சாலையாக விளங்கும் இந்த ஆலையில், முன்னதாக கடந்த ஏப்ரல் மாதமும் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், தற்போது இரண்டே மாதங்களில் இச்சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்துப் பேசிய அனகாபல்லே காவல் துறையினர், "பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரது உடல்நிலையும் தற்போது சீராக உள்ளது. நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை" எனத் தெரிவித்துள்ளனர்.
Andhra Pradesh | Around 30 women workers fell sick after a gas leaked from Porus laboratories Pvt Ltd company in Atchutapuram, Visakhapatnam. At present all workers' health is stable, no casualties reported. We're carrying out the investigation: SP Gowthami Sali pic.twitter.com/3dioEToaMY
— ANI (@ANI) June 3, 2022
ஆந்திர முதலமைச்சர் உத்தரவு
எரிவாயு கசிவுக்கான காரணம் குறித்து இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், இது ஆந்திரப் பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் காவல்துறை துறையினரும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ள ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, இச்சம்பவ இடத்தை அமைச்சர்கள் பார்வையிடுமாறும், இது குறித்து விரைந்து விசாரணை மேற்கொள்ளுமாறும் துரிதப்படுத்தியுள்ளார்.
மேலும் படிக்க: லாரி மீது மோதி பற்றி எரிந்த பேருந்து..! 2 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு..! 12 பேர் படுகாயம்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்