புறாவுக்கு தண்ணீர் ஊட்டிய சிறுவன்.. வனத்துறை அதிகாரி பகிர்ந்து வைரலான வீடியோ..
இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார்.
இளம் வயது சிறுவன் தனது வீட்டு பால்கனியில் இருந்தபடியே முயற்சிசெய்து சோர்வடைந்த புறாவுக்கு தண்ணீர் அளிக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துகொண்டார்.
வீடியோவில், சிறுவன் தனது பால்கனியில் இருந்துகொண்டு, கரண்டியில் தண்ணீர் அளிக்க முற்படுகிறான். முதலில், புறா தயக்கம் காட்டினாலும், பிறகு தண்ணீரைக் குடிக்க ஆரம்பிக்கிறது.
Kindness & trust are co brothers...
— Susanta Nanda IFS (@susantananda3) April 7, 2021
God bless the child☺️
Shared by @Priyamvada22S pic.twitter.com/6feV79qHEK
சிறுவனின் இந்த செயலுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். தற்போதைய இளைஞர்களை விட சிறுவர்கள் நல்ல மனிதாபிமானத்துடன் செயல்படுகின்றனர். நாளைடவில் இவர்கள் மனம் மாறாதென நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
Kids🥰- more humane than present day adults. Hope they do not change their heart, later on also.
— Mahesh Engineer (@maheshengineer) April 7, 2021
This is much better than the above the privileged human boy who has the sixth sense helping a thirsty Bird, here a old Bird who could not find his own food is taken care of a smaller bird who understood the hunger of the elder and feeding it. What to say? God's play may be 🙏💐 pic.twitter.com/OGWKJluiwP
— ncsukumar (@ncsukumar1) April 8, 2021