Video: காதலியை பார்க்க துப்பாக்கியுடன் புர்கா அணிந்து சென்ற இளைஞர்: பொதுமக்களிடம் சிக்கி தர்ம அடி: அடுத்து ட்விஸ்ட்.!
Youth Wears Burqa: புர்கா அணிந்து தனது காதலியை பார்க்க சென்ற நபரை , பொதுமக்கள் பிடித்து தாக்குதல் நடத்தி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
![Video: காதலியை பார்க்க துப்பாக்கியுடன் புர்கா அணிந்து சென்ற இளைஞர்: பொதுமக்களிடம் சிக்கி தர்ம அடி: அடுத்து ட்விஸ்ட்.! Viral VIDEO Youth Wears Burqa To Meet Girlfriend In Moradabad Uttar Pradesh Caught Beaten By Locals Police Recover gun Video: காதலியை பார்க்க துப்பாக்கியுடன் புர்கா அணிந்து சென்ற இளைஞர்: பொதுமக்களிடம் சிக்கி தர்ம அடி: அடுத்து ட்விஸ்ட்.!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/02/f03f072477f6dd78621d80f86fd737f11725288071675572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
புர்கா அணிந்தவரை பார்த்து சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், அவரை பிடித்து சரமாரியாக தாக்கி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அவரிடம் இருந்து துப்பாக்கியும் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காதலியை பார்க்க சென்ற நபர்?
உத்திரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில், தனது காதலியை சந்திக்க பர்தா அணிந்து இளைஞர் ஒருவர் வந்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் அவரை பிடித்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், அவரிடம் இருந்து துப்பாக்கியும் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடந்தது என்ன?
மொராதாபாத்தில் பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது, அந்த நபர் சந்த் புரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர், தனது காதலியின் மீதான அதீத காதலால் பர்தா அணிந்து தனது காதலியை சந்திக்கச் சென்றிருக்கிறார். ஆனால் அவரது நடத்தையில் உள்ளூர்வாசிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சிலர் அவரை ஒரு திருடன் என்றும் மற்றவர்கள் அவரை குழந்தை கடத்தல்காரர் என்றும் நினைத்தனர். இதையடுத்து, அந்த நபரை பர்தாவை கழற்றுமாறு தெரிவித்தனர். இதையடுத்து, பர்தாவை அப்பகுதி மக்களை கழற்றியிருக்கின்றனர்.
उत्तर प्रदेश के जिला मुरादाबाद में गर्लफ्रेंड से मिलने के लिए चांद भूरा नामक युवक बुर्का पहनकर पहुंच गया। लोगों को शक हुआ और उसे पकड़ लिया। तलाशी में एक लाइटर पिस्टल भी मिली। फिर उसकी पिटाई हुई। पुलिस को सौंप दिया गया। pic.twitter.com/lJvA8NVnnq
— Sachin Gupta (@SachinGuptaUP) September 2, 2024
பர்தா அணிந்த பெண் வேடத்தில் ஆண் ஒருவர் இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அவரிடம் துப்பாக்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது, மேலும் அந்த வீடியோவில் இளைஞர் கட்டடத்தில் இருந்து வெளியே வருவதையும் மக்கள் அவரை விசாரணைக்காக நிறுத்துவதையும் பார்க்க முடிகிறது. அந்த கும்பல் அந்த இளைஞரிடம் ஆதார் அட்டையைக் காட்டுமாறு கூறியதையடுத்து, அந்த இளைஞரை அடிக்கத் தொடங்கினர். இதையடுத்து இளைஞரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் கூட்டத்திலிருந்து இளைஞரை மீட்டு சிறையில் அடைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)