Monkeys Video : ஸ்மார்ட்ஃபோனின் முகத்தை பார்த்த குரங்குகள், செய்தது என்ன தெரியுமா? வைரல் வீடியோ..
கைகளில் ஸ்மார்ட்ஃபோனை பெற்றுக்கொண்ட குரங்குகள் அதை திகைத்துப்போய் பார்த்தன.
பல ஆண்டுகளாக, தொழில்நுட்பம் உலகில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. நமது அன்றாட வாழ்வில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. முதல் ஸ்மார்ட்ஃபோனை வாங்கியபோது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்பதை கொஞ்சம் யோசித்து பாருங்கள்.
Craze Of Social Media🤦♀️🤦♀️ pic.twitter.com/UiLboQLD32
— Queen Of Himachal (@himachal_queen) July 10, 2022
ஒரு சிறிய கேஜெட்டால் என்ன செய்ய முடியும் என ஸ்மார்ட்ஃபோனை பார்த்து ஈர்க்கப்பட்டு திகைத்துப் போய் இருப்பீர்கள்? இதேபோல உணர்வை ரீசஸ் மக்காக்ஸ் என்ற குரங்கு வகை வெளிப்படுத்தி உள்ளது.
கைகளில் ஸ்மார்ட்ஃபோனை பெற்று கொண்ட குரங்குகள் அதை திகைத்து போய் பார்த்தன. ஸ்மார்ட்ஃபோனில் மற்ற குரங்கின் படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்த்த குரங்குகள் எப்படி எதிர்வினை ஆற்றியது என்பது குறித்து அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில், இரண்டு குரங்கு குட்டிகளிடம் யாரோ ஒருவர் ஸ்மார்ட்ஃபோனை காட்டுகிறார். அதில், மற்ற குரங்குகளின் வீடியோவைப் பார்த்து குரங்கு குட்டிகள் திகைத்து போனதை காணலாம். தங்கள் நண்பர்கள் எப்படி பெட்டிக்குள் நுழைந்தார்கள் என்ற அதிர்ச்சி கலந்த குழப்பத்தை குரங்குகள் வெளிப்படுத்துகிறது.
பின்னர், குட்டிகள் என்ன பார்க்கிறார்கள் என்பதைப்பார்க்க ஒரு பெரிய குரங்கு அவர்களுடன் சேர்ந்து கொள்கிறது. மூன்று குரங்குகள் தொலைபேசியின் திரையைத் தொட்டு அதைத் தட்டுகின்றன. ஆனால் பெட்டிக்குள் உள்ள குரங்குகளை தங்களால் தொட முடியவில்லை என்பதை குரங்குகள் உணர்ந்து கொள்கின்றன. பகிரப்பட்டதிலிருந்து, இந்த வீடியோவை 1 லட்சத்து 26,000க்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். 670க்கும் மேற்பட்டோர் ரீட்வீட் செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், வைரலாகப் பரவிய வீடியோ மீண்டும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. குரங்குகள் எப்படி ஸ்மார்ட்போன் மற்றும் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகின்றன என்பதைப் பற்றி சிரிக்கும் வகையில் பலரும் ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நகைச்சுவையாக பதிவிட்ட ஒருவர், "தொழில்நுட்ப ஆர்வமுள்ள குரங்குகள்" என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “எங்கள் உறவினர்களின் ஆர்வத்தைப் பாருங்கள். மிகச் சிறப்பாக உள்ளது" என பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்