viral video : உடைந்த குழாய் : சீறிப்பாய்ந்த தண்ணீர் ! - பயணிகளை குளிக்க வைத்த இந்திய இரயில்வே ! - வைரல் வீடியோ
அந்த பகுதியில் வந்த இரயிலில் படிக்கட்டுகள் மற்றும் சன்னல் ஓரங்களில் அமர்ந்திருந்த பயணிகளையும் நனைத்து விடுகிறது. இதனை சற்றும் எதிர்பாராத இரயில் பயணிகள் திடுக்கிட்டு போவதையும் வீடியோ காட்டுகிறது.
இரயில்வே நிலையத்தில் உள்ள குடிநீர் குழாய் உடைந்த நிலையில், அது ரயிலில் பயணம் செய்த பயணிகள் மீது சீறிப் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலத்தின் ஒரு இரயில்வே நிலையத்தில் உள்ள குடிநீர் குழாய் ஒன்று உடைந்த நிலையில் இருந்திருக்கிறது. இந்த சூழலில் அப்போது தண்ணீர் வெளியாவதை தடுக்க தடுப்பு ஏதோ வைத்திருக்கின்றனர். அந்த தடுப்பு உடைந்த நிலையில் தண்ணீர் பீரங்கியில் இருந்து குண்டு வெளியாவதை போல ஒரே நேர்க்கோட்டில் சீறிப்பாய்ந்த நிலையில் அதனை ஒருவர் வீடியோ எடுக்க துவங்குகிறார். அந்த சமயத்தில் அங்கு வந்த இரயில் ஒன்று தனது இயக்கத்தை குறைத்து, நிற்பதற்கு ஆயத்தமாகிறது. இரயில் குழாயில் இருந்து வெளியாகும் தண்ணீர் ரயில் தண்டாவளம் வரையில் பாய்ந்த நிலையில் , அந்த பகுதியில் வந்த இரயிலில் படிக்கட்டுகள் மற்றும் சன்னல் ஓரங்களில் அமர்ந்திருந்த பயணிகளையும் நனைத்து விடுகிறது. இதனை சற்றும் எதிர்பாராத இரயில் பயணிகள் திடுக்கிட்டு போவதையும் வீடியோ காட்டுகிறது.
வீடியோ :
Indian railways at your service 😂 pic.twitter.com/fEL65NFjHs
— Abhy (@craziestlazy) October 26, 2022
கடந்த புதன் கிழமையன்று அபி என்ற ட்விட்டர் பயனாளர் இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.1.1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 26,000 க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் இந்த வீடியோ பெற்றுள்ளது. இதற்கு கேப்ஷனாக “உங்கள் சேவையில் இந்திய இரயில்வே“ என குறிப்பிடப்பட்டுள்ளது.
I can't see the fault of Railway. I see how nonsense you and those who were present there
— सर्वे भवन्तु सुखिनः🚩may all live with peace. (@chitrasenindia1) October 26, 2022
This is crazy and more crazy is no one tried to stop it just by pushing a hanky or card board in it. https://t.co/1GW5VufJrU possible that picturisation done in 5-10 minutes by the time problem is fixed.
— Vinodvaya (@Vinodvayaa) October 26, 2022
30 வினாடி காட்சிகளை கண்ட நெட்டிசன்கள் பலர் நகைச்சுவையாகவும், சிலர் சீரியஸாகவும் இந்த வீடியோவிற்கு கீழே கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றன. ஒருவர் “பலர் காலையில் குளிக்கவில்லை என்பது ரயில்வேக்கு கூட தெரியும். அதனால்தான் உதவி செய்கிறது “ என்றார். மற்றொருவர் “அது ஆட்டோ க்ளீனிங் சிஸ்டம்" என்றார். ஒருவர் “ குறைந்த பட்சம் ஒரு நபராவது குழாயை துணியால் அல்லது வேறு ஏதாவது கொண்டு மூடியிருக்கலாம்.யாருக்கும் கவலை இல்லை “ என்றார். மற்றொருவர் “ ரயில்வேயின் தவறை என்னால் பார்க்க முடியவில்லை. நீங்களும் அங்கு இருந்தவர்களும் எவ்வளவு முட்டாள்தனமாக இருக்கிறீர்கள் என்பதுதான் எனக்கு தெரிகிறது என்றார்.