Filter Coffee : ’பாட்டியின் பில்டர் காபி 290 ஓவாப்பே’ : ஸ்டார் பக்ஸ் வைத்த விலை.. கலாய்த்துத்தள்ளிய நெட்டிசன்ஸ்
இதற்கிடையே தற்போது தனது கஃபே செயின்களில் மக்கள் நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த ஃபில்டர் காபிக்களையும் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது
பிரபல சர்வதேச உணவகச் செயின்களில் ஒன்றான ஸ்டார்பக்ஸ் அதன் சுவையான உணவு ரகங்களுக்காகவும் தனித்துவமான வாடிக்கையாளர் தேவை பூர்த்தி செய்வதற்காகவும் பெயர்போனது. இருப்பினும் அதன் விலைப்பட்டியல் காரணமாக தொடர்ச்சியாகப் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. அதன் ஒரு ஹாட் சாக்லேட் விலை முந்நூற்று ஐம்பது ரூபாய். அப்படியேனும் அதனைச் சாப்பிட வேண்டுமா எனத் திரும்பிய நபர்கள் ஏராளம். இதற்கிடையே தற்போது தனது கஃபே செயின்களில் மக்கள் நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த ஃபில்டர் காபிக்களையும் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அடடே என்று ஸ்வாரசியமாக அருகில் இருக்கும் ஸ்டார் பக்ஸுக்கு நடைபோடுவதற்கு முன்பு, அதன் ஒரு ஃபில்டர் காபியின் விலை என்ன தெரியுமா? சுமார் 290 ரூபாய்...இதனுடன் வரிகளும் சேர்த்துக்கொள்ளவும். ஒரு ஃபில்டர் காபி மட்டும் ஸ்டார் பக்ஸில் 300 ரூபாய்.
இதற்கான விளம்பரம்தான் தற்போது நெட்டிசன்களை கொஞ்சம் சோதித்துவிட்டது எனலாம்...ஸ்டார் பக்ஸ் தனது பில்டர் காபிக்கான விளம்பரத்தில் ”பாட்டிம்மா அப்ரூவ் செய்த காபி..வெறும் 290 ரூபாய் மட்டுமே” என விளம்பரப்படுத்தியிருந்தது.
இந்த விளம்பரம் வைரலானதை அடுத்து நெட்டிசன்கள் கமெண்ட்களால் கலாய்க்கத் தொடங்கிவிட்டனர்.
ட்விட்டரில் ஒருவர் “எந்த பாட்டிம்மாவும் 290+ வரிகள் செலுத்தவேண்டிய காபிக்கு அப்ரூவல் கொடுக்க மாட்டார்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு வைரலானதை அடுத்து பலர் அதில் கருத்து தெரிவித்தனர்.
மற்றொருவர் “நாம் 300 ரூபாய்க்கு காபி வாங்கியது தெரிந்தால் பாட்டிம்மா சாட்டையை சுழற்றுவார்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
வேறொருவர்,”என் அலுவலகம் அருகில் 20 ரூபாய்க்கு நல்ல காபி கிடைக்கிறது.அதற்கே எனது பாட்டிம்மா விலை அதிகம் என்கிறார். வீட்டிலேயே நல்ல காபி சாப்பிடலாம் என்கிறார். இது தெரிந்தால் அவ்வளவுதான்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
”அட நாங்க ஏன்யா ஸ்டார்பக்ஸ்ல பில்டர் காபி குடிக்கப் போறோம்” என்கிறனர் வேறு சிலர்...
என்ன இருந்தாலும் 290 ஓவாய் கொஞ்சம் அநியாயம்தான்..
Dear Strbucks, there's literally no ajji in god's green earth who'll approve a filter coffee for 290rs +taxes. 🙏🏻 pic.twitter.com/JtPIhakJdq
— Adithya Venkatesan (@adadithya) January 23, 2023