மேலும் அறிய

உ.பியில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை; பாஜகவிற்கு எதிராக வலுக்கும் கண்டனம்!

போராட்டத்திற்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை எனவும், வன்முறையின் போது தனது மகன் இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரம் உள்ளதாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்துவருகிறார்.

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளின் போராட்டத்தின் போது ஏற்பட்ட சம்பவம் அநீதிக்கு எதிரானது என ராகுல், மம்தா உள்ளிட்ட எதிர்க்கட்சித்தலைவர்கள் கடும் கண்டனங்களைப் பதிவிட்டுவருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் என்ற இடத்தில் துணை முதல்வர் மற்றும் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பங்கேற்கும் விழா ஒன்று நடைபெறவிருந்தது. எனவே அவ்விழாவிற்கு வருகைத் தந்த பாஜக தலைவர்களுக்கு எதிராக விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சர் மற்றும் பாதுகாப்பு வாகனக் கார்களை வழிமறித்து விவசாயிகள் போராட்டம் நடத்திய சமயத்தில், தீடிரென மத்திய இணைய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகனின் கார் கூட்டத்திற்குள் புகுந்தது. இதனால் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டுவருகின்றனர்.

  • உ.பியில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை; பாஜகவிற்கு எதிராக வலுக்கும் கண்டனம்!

இந்நிலையில் தான், ஆத்திரமடைந்த விவசாயிகள் விபத்துக்குக் காரணமாக இருந்தக் காரை எரித்துப் போராட்டம் நடத்தினர். இவர்களின் போராட்டத்தைக்கட்டுக்கொண்டுவிதமாக  விதமாக போலீசார் தடியடி  நடத்திக்கலைக்க முயன்றுள்ளனர். அப்போது மிகப்பெரிய வன்முறை சம்பவம் அப்பகுதியில் அரங்கேறியது. மேலும் மாநிலத்தின் நிலைமையை உடனடியாக  கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில் டி.ஜி.பி பிரசாந்த் குமார் சம்பவ இடத்திற்கு வந்தார். இதனையடுத்து பல மணி நேரம் போராட்டத்திற்கு ஓரளவிற்குக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருந்தப்போதும் விவசாயிகளின் மீது தாக்குதல் நடத்திய பாஜக அரசிற்கு எதிராக இன்று நாடு முழுவதும் விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

மேலும் இந்தப்போராட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சித்தலைவர்கள் கண்டனங்களைத்தெரிவித்துவருகின்றனர் குறிப்பாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், விவசாயிகளின் மீது மத்திய அமைச்சரும், பாஜகவினரும் வேண்டுமென்றே திட்டமிட்டமிட்டு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். எனவே இனியும் அமைதியாக இருந்தால் நாம் அனைவரும் செத்துவிட்டதாக அர்த்தம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 இதேப்போன்று லக்கிம்பூரில் நடைபெற்ற வன்முறை சம்பவத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனத்தைத்தெரிவித்துள்ளதோடு, விவசாயிகளுக்கு திரிணாமுல் காங்கிரசின் ஆதரவு எப்போதும் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.  மேலும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் விவாசாயிகளின் போராட்டத்திற்கு எதிராகக் கண்டனங்களைத்தெரிவித்துவருகின்றனர்.  

  • உ.பியில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை; பாஜகவிற்கு எதிராக வலுக்கும் கண்டனம்!

ஆனாலும் இந்தப்போராட்டத்திற்கு எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை எனவும், வன்முறையின் போது தனது  மகன் அங்கு இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரம் உள்ளதாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதோடு இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையால் பா.ஜ.க வைச்சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த சூழலில் தான்  இன்று உத்தரப்பிரதேசத்தில் லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்கசென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று அதிகாலை பன்வீர்பூர் கிராமத்திற்கு காரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அவரை கிராமத்திற்குள் நுழைய அனுமதிக்காமல், கிராம எல்லையிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

தலைப்பு செய்திகள்

Social Media: 2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?
2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Embed widget