Vijay Diwas 2022: டிசம்பர் 16-ஆம் தேதியை இந்தியா கொண்டாடுகிறது.. அறிய வேண்டிய சுவாரஸ்ய வரலாறு!
1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில் கிழக்கு பாகிஸ்தான் (இப்போது பங்களாதேஷ்) இந்தியாவுடன் இணைந்து போரிட, இந்திய ஆயுதப் படைகள் அந்த போரில் வெற்றிபெற்றது.
1971 இல் நடந்த போர், அமெரிக்காவிற்கும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கும் இடையிலான உறவை மாற்றியமைத்தது. 13 நாட்கள் நீடித்த போர் டிசம்பர் 16, 1971 அன்று பாகிஸ்தான் ராணுவத்தின் சரணடைதலுடன் முடிவுக்கு வந்த நிலையில், விஜய் திவாஸ் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16 அன்றும் நினைவுகூரப்படுகிறது.
விஜய் திவாஸ்
இந்த போர் பாகிஸ்தானில் உள்நாட்டு நெருக்கடியுடன் தொடங்கி, இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே மூன்றாவது போராக மாறியது. 1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில் கிழக்கு பாகிஸ்தான் (இப்போது பங்களாதேஷ்) இந்தியாவுடன் இணைந்து போரிட, இந்திய ஆயுதப் படைகள் அந்த போரில் வெற்றிபெற்றது. சுதந்திர தேசமாக வங்காளதேசத்தை உருவாக்கிய நாளை இந்த விஜய் திவாஸ் குறிக்கிறது. இராணுவ வீரர்கள், குடிமக்கள், ஆயுதப்படைகள், அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கம், இந்த வீரர்களின் தியாகத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அஞ்சலி செலுத்துகின்றனர். பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் விடுவிக்கப்பட்ட தினத்தை விஜய் திவாஸ் என்று கொண்டாடுகிறோம்.
பிஜோய் டிபோஸ்
1971 ஆம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் படைகளுக்கு எதிராக இந்திய ஆயுதப் படைகள் பெற்ற வெற்றியின் நினைவாக விஜய் திவாஸ் கொண்டாடப்படுகிறது. தங்கள் தேசத்தைக் காக்க உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே 13 நாட்கள் நீடித்த போர், 1971 டிசம்பர் 16-ம் தேதி முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து வங்கதேசம் என்ற புதிய நாடு உருவானது. எனவே, இந்த நாள் பங்களாதேஷில் பிஜோய் டிபோஸ் அல்லது வெற்றி தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
பாகிஸ்தான் மேற்கு - கிழக்கு
1947ல் இந்தியாவில் இருந்து பிரிந்து மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தான் உருவானது. இந்த பிரதேசங்கள் இரண்டுமே இஸ்லாத்தின் மேலாதிக்க மதத்தையே முன்னிலைப்படுத்தி இருந்தாலும், மொழி, இனம் மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் இரண்டும் கணிசமான அளவில் வேறுபட்டு இருந்தன. 1970 பாராளுமன்றத் தேர்தல்களில், கிழக்கு பாகிஸ்தானுக்கு சுயாட்சியை கொடுப்பதற்காக வாதிடும் அரசியல் கட்சிக்கு அதிக எண்ணிக்கையிலான கிழக்கு பாகிஸ்தானியர்கள் வாக்களித்த நிலையில், அந்த முயற்சிகளை ராணுவமும், அப்போதைய பாகிஸ்தான் அரசும் தடுத்து நிறுத்தியது. கிழக்குப் பகுதியில் வெகுஜன எதிர்ப்புக்கள் தொடங்கியது, ஆனால் பாகிஸ்தான் இராணுவத்தால் கொடூரமாக ஒடுக்கப்பட்டது வரலாறு. கிழக்கு பாகிஸ்தானிய கொரில்லாப் படைகள், இந்தியாவின் ஆதரவுடன், 1971 இல் பாகிஸ்தான் இராணுவத்துடன் போரிட்டன. பாகிஸ்தான் இந்தியா மீது வான்வழித் தாக்குதல்களால் பதிலடி கொடுத்தது, இதன் விளைவாக டிசம்பர் 3 முதல் இரு தரப்பினர் இடையே வெளிப்படையான போர் தொடங்கியது.
விஜய் திவாஸ் - முக்கியத்துவம்
1971ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் படைகளுக்கு இடையே நடந்த போர் வங்கதேசத்தின் விடுதலையில் முக்கிய பங்கு வகித்தது. பாகிஸ்தானில் ஏற்பட்ட உள்நாட்டு நெருக்கடி இந்தியாவுடன் போராக மாறி கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து சென்ற ஆண்டு அது. இது அமெரிக்காவிற்கும் தெற்காசிய பிராந்தியத்திற்கும் இடையிலான உறவையும் மாற்றியது.
இந்த குறிப்பிடத்தக்க வரலாற்றையும் வங்கதேசத்தின் எழுச்சியையும் நினைவுகூரும் வகையில் விஜய் திவாஸ் கொண்டாடப்படுகிறது. மேலும் அதில் பங்குகொண்ட போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறது. விஜய் திவாஸ் என்பது நமது வரலாற்றை நினைவுகூரவும், அதிலிருந்து கற்றுக்கொள்ளவும் வாய்ப்பளிக்கக் கூடிய ஒரு நாளாகும். போர்கள் எப்போதும் கடுமையான இழப்புகளுடன் முடிவு பெறுகின்றன. அது ஒருபுறம் இருக்க, இதுபோன்ற போர்களின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் மக்கள் கற்றுக் கொள்ளலாம், இதன்மூலம் இதுபோன்ற மனித உயிரிழப்புகளைத் தடுப்பதற்கான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.