Watch Video | மணிகே மக்கே ஹிதே.. யோஹானியின் பாட்டைப்பாடி கலக்கிய குட்டி தேவதை.. இன்ஸ்டா வைரல்..
இன்ஸ்டாவில் பார்த்த நெட்டிசன்கள், குழந்தையின் செய்கை மிகவும் ரசனையாக இருக்கிறது, இவள் மிகவும் அழகானவள் போன்ற மெசேஜ்களுடன் ஸ்மைலி, ஹார்டின் போன்ற ஈமோஜிகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
‘மணிக்கே மாக்கே ஹித்தே’ என்ற ஹிட் பாடலை பாடியும் க்யூட்டாக நடனம் ஆடிய சிறுமியின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
குழந்தைகள் செய்யும் குறும்புத்தனமான விஷயம் தான் சமீப காலங்களாக இணையத்தை கலக்கி வருகிறது. குழந்தைகள் சண்டை போடுவது, செல்லமாகப்பேசுவது, நடனம் ஆடுவது, பாடுவது போன்ற என்ன செய்கை செய்தாலும் ரசிக்கும் வகையில் தான் இருக்கும். அதிலும் டிரெண்டாகி வரும் ஒரு விஷயத்தைச் செய்தால் சொல்லவா வேண்டும். நெட்டிசன்கள் வாழ்த்து மழையை தெறிக்க விடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு விஷயம் தான் தற்போது இன்ஸ்டகிராமை கிறங்கடித்துவருகிறது.
சுமார் 5 வயதிற்குள்ளான பெண் குழந்தை ஒன்று கையில் 2 பொம்மைகளையும், அமேசான் அலெக்சாவையும் வைத்துக்கொண்டு மக்களிடம் மிகவும் பிரபலமடைந்த சிங்களப்பாடலான மணிக்கே மாக்கே ஹித்தே என்ற பாடலைப்பாடி கியூட்டாக பாட்டுபாடி நடனம் ஆடியதை அக்குழந்தையின் தாய் லிசா ஆன் நிமலச்சந்திரா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாடகி யோஹானி மணிக்கே மாக்கே ஹித்தே என்று சிங்களப்பாடலைப்பாடி அதனை யூடிப்பில் பதிவிட்ட நிலையில் 18 மில்லியன் அதாவது 1.8 கோடி பார்வையாளர்களைப்பெற்று ரசிகர்கள் மனதில் மிகவும் ஹிட் அடித்தது. இதோடு பாடகி யோஹானிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. மேலும் தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்களில் இதன் சிறு பகுதியை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸாக வைத்து வந்தனர். அந்த அளவிற்கு மக்களிடம் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. இதன் காரணமாக தற்போது இந்த பாடகி தமிழ் மொழியில் பாடுவார் என்று கூறப்படுகிறது.
View this post on Instagram
இப்படி இணையத்தைக்கலக்கிய இந்தப் பாடலை இச்சிறுமி பாடிய நிலையில் மிகுந்த வரவேற்பைப்பெற்றுள்ளது. பொம்மையை வைத்துக்கொண்டு இரண்டு ஸ்டெப் போட்ட இச்சிறுமியைப் பார்ப்பதற்கே மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது. மேலும் இந்த வீடியோவை இன்ஸ்டாவில் பார்த்த நெட்டிசன்கள், குழந்தையின் செய்கை மிகவும் ரசனையாக இருக்கிறது, இவள் மிகவும் அழகானவள் போன்ற மெசேஜ்களுடன் ஸ்மைலி, ஹார்டின் போன்ற ஈமோஜிகளையும் பதிவிட்டு வருகின்றனர். நிச்சயம் இச்செயல் அனைவராலும் ரசிக்கும் வகையில் இருந்தது என்று தான் கூற வேண்டும்..