Savarkar PM Modi : ”சிறையில் இருக்கும்போது இந்த பஜனைதான் பாடினார்..” : சாவர்க்கரை புகழ்ந்த பிரதமர் மோடி..
இந்துத்துவ சிந்தனையாளரான சாவர்க்கர் இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் சிறையில் இருந்தபோது, புனிதர் துக்காராமின் பாடலை பாடியதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்துத்துவ சிந்தனையாளரான சாவர்க்கர் இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் சிறையில் இருந்த போது, புனிதர் துக்காராமின் பாடலை பாடியதாக பிரதமர் மோடி தெரிவித்தார். "சிறையில் இருக்கும்போது, கைவிலங்குகளை இசை கருவிகளாக பயன்படுத்திய சாவர்க்கர், துகாராமின் பாடல்களை பாடினார்" என பிரதமர் மோடி தெரிவித்தார்.
புனே அருகே உள்ள தேஹுவில் 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த துறவியான துகாராம் மகாராஜாவுக்கு என கோயில் உள்ளது. இந்த கோயிலில் கற்கோயில் ஒன்றை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பிறகு, பந்தலூரில் உள்ள விட்டல் ஆண்டவர் கோயிலுக்கு வந்த பக்தர்களிடம் அவர் உரையாடினார். ஜூன் 20ஆம் தேதி முதல் வருடாந்திர யாத்திரை தொடங்கவுள்ள நிலையில், பிரதமர் மோடி அங்கு பயணம் மேற்கொண்டு உள்ளார்.
இதையும் படிக்க: நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய பிரதிநிதிகள் இல்லாத ஆளுங்கட்சியாக மாறும் பாஜக: ரிப்போர்ட் சொல்வது என்ன?
இந்த விழாவில் துகாராமின் சிறப்பு தலைக்கவசம் மோடிக்கு வழங்கப்பட்டது. பக்தி இயக்கத்தில் முக்கிய பங்காற்றிய துகாராமை புகழ்ந்து பேசிய மோடி, "அவர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் போன்று நாட்டின் வரலாற்றில் முக்கிய பங்கு வகித்தார்" என்றார்.
சிறப்பு வகை ராஜஸ்தானி கற்களால் கட்டப்பட்ட இந்த கற் கோயிலில்தான் துக்காராம் 13 நாள்கள் தியானம் செய்தார். பந்தலூருக்கு செல்வதற்கு முன்பு, இந்த கற் கோயிலில் பக்தர்கள் வழிபாடு மேற்கொள்வது வழக்கம். இந்த கற் கோயில் அருகில் உள்ள கோயிலில் துகாராமின் சிலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: IND vs SA, 1st T20 : எனக்கு இது முன்னவே தெரியும்; அதுதான் ட்விட்ஸ்ட்! - இந்தியாவுடனான வெற்றி குறித்து வான்டர் டுசன்
அபங் எனப்படும் பக்தி கவிதைகளுக்காகவும் கீர்த்தனைகளான ஆன்மீகப் பாடல்களுக்காகவும் துகாராம் பிரபலமானார். அவரது படைப்புகள் மகாராஷ்டிராவில் உள்ள பந்தலார் பக்தர்கள் பிரிவினரிடையே முக்கியமாக கருதப்படுகிறது. இந்திராயணி ஆற்றின் கரையில் உள்ள தேஹுவில்தான் துக்காராம் பிறந்தார்.
துகாராமுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள கோயில் குறித்து பேசிய மோடி, "துறவி தியானேஷ்வர் மஹாராஜ் மற்றும் துறவி துக்காராம் மஹாராஜ் பால்க் மார்க்கின் கட்டுமானம் ஐந்து கட்டங்களாக முடிக்கப்படும். 350 கிமீ (ஆலந்தி-தேஹு-பந்தர்பூர்) நெடுஞ்சாலை அமைக்க ₹ 11,000 கோடி செலவிடப்படும்" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்