Uttarakhand Accident: ரிஷிகேஷ் - பத்ரிநாத் சாலையில் கவிழ்ந்த வேன்.. இதுவரை 12 பேர் உயிரிழந்ததாக தகவல்..!
உத்தரகாண்ட் அடுத்த ரிஷிகேஷ் - பத்ரிநாத் சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 12 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
உத்தரகாண்ட் அடுத்த ரிஷிகேஷ் - பத்ரிநாத் சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 12 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
#WATCH | Uttarakhand: A tempo traveller, with about 17 passengers on board, fell into a deep gorge near Badrinath Highway in Rudraprayag. Rescue work is being carried out by SDRF and Police team. So far, two injured have been sent to the hospital by the team through ambulance.… pic.twitter.com/5v9nhLFL4B
— ANI (@ANI) June 15, 2024
உத்தரகாண்ட் இன்று காலை பத்ரிநாத் நெடுஞ்சாலையில் ருத்ரபிரயாக் அருகே அலக்நந்தா ஆற்றில் டெம்போ டிராவலர் கவிழ்ந்தது. டிராவலரில் சுமார் 17 பயணிகள் இருந்த நிலையில், வேனில் பயணித்த 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
#WATCH | Uttarakhand: 8 people died when a tempo traveller fell into a deep gorge near Badrinath Highway in Rudraprayag. Rescue operation underway.
— ANI (@ANI) June 15, 2024
(Video: SDRF) pic.twitter.com/vBAQCnioyO
மேலும், 10க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ருத்ரபிரயாக் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. SDRF மற்றும் போலீஸ் குழுவினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.