கிணற்றின் மீது அமர்ந்து கல்யாணத்தை ரசித்த கூட்டம்... ஸ்லாப் உடைந்து 11 பேர் உயிரிழப்பு
உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் நேற்று இரவு திருமண கொண்டாட்டத்திற்கு சென்ற 11 பேர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் நேற்று இரவு திருமண கொண்டாட்டத்திற்கு சென்ற 11 பேர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, இறந்தவர்கள் அனைவரும் கிணற்றை மூடியிருந்த ஸ்லாப் மீது அமர்ந்திருந்தபோது, அதிக சுமை காரணமாக கிணறு மேல் இருந்த ஸ்லாப் உடைத்து அமர்ந்திருந்த அனைவரும் விழுந்துள்ளனர்.
இதையடுத்து, அங்கு இருந்த பலர் அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவர்கள் அவர்களை பரிசோதித்து பார்த்ததில் 11 உயிரிழந்தாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் 9 சிறுமிகளும் இரண்டு பெண்களும் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
இதுகுறித்து, குஷிநகர் மாவட்ட நீதிபதி ராஜலிங்கம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருமண நிகழ்ச்சியின் போது சிலர் கிணற்றின் பலகையின் மீது அமர்ந்திருந்தபோது, அதிக பாரம் ஏற்றியதால், பலகை உடைந்து விழுந்து 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
UP | 13 women have died. The incident occurred last night at around 8.30 pm in the Nebua Naurangia, Kushinagar. The incident happened during a wedding program wherein some people were sitting on a slab of a well & due to heavy load,the slab broke: Akhil Kumar, ADG, Gorakhpur Zone pic.twitter.com/VaQ8Sskjl2
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 17, 2022
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தலா ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என குஷிநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் குறிபிட்டுள்ளார். தொடர்ந்து, துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளை வழங்கவும் உள்ளூர் நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்