UP Election Result 2022 LIVE: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வெற்றி
UP Election Result 2022 LIVE updates: உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் இங்கு தெரிந்து கொள்ளலாம்
LIVE
Background
UP Election Result 2022 LIVE Updates:
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட உள்ளன. உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வெற்றி
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்றார்.
3 மாநிலங்களில் முன்னிலை - பாஜக தலைமை அலுவலகத்திற்கு வருகிறார் பிரதமர் மோடி
உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், கோவா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில், இன்று மாலை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி வருகிறார்.
UP Election Results 2022 Live: பாஜக தலைவர் கேசவ் பிரசாத் மவுரியாவிற்கு பின்னடைவு
உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா சிராத்து தொகுதியில் பின்னடவை சந்தித்துள்ளார்.
UP Election Results 2022 Live: 112 இடங்களில் முன்னிலையில் சமாஜ்வாதி முன்னிலை
உத்தரப்பிரதேசத்தில் தற்போதைய நிலவரத்தின்படி சமாஜ்வாதி கட்சி 112 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 259 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
UP Election Results 2022 Live: உ.பியில் நாங்க மீண்டும் ஆட்சியமைப்போம் என்று தெரியும்-பாஜக எம்பி ஹேமமாலினி
உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக அக்கட்சியின் எம்பி ஹேமமாலினி,”உத்தரப்பிரதேசத்தில் நாங்கள் மீண்டும் ஆட்சியமைப்போம் என்று எங்களுக்கு தெரியும். ஏனென்றால் நாங்கள் எல்லா இடங்களில் வளர்ச்சிக்கு பாடுப்பட்டுள்ளோம். அதனால் தான் மக்களை எங்களை நம்புகின்றனர்”எனத் தெரிவித்துள்ளார்.