Watch Video: நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட சிறுத்தை.. பிறந்த 3 குட்டிகள்.. ட்ரெண்டிங்கில் வீடியோ..
பிரதமர் நரேந்திர மோடியால் பெயரிடப்பட்ட நமீபிய சிறுத்தை ஒன்று குனோ தேசிய பூங்காவில் மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியால் பெயரிடப்பட்ட நமீபிய சிறுத்தை ஒன்று குனோ தேசிய பூங்காவில் மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது.
மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள குனோ தேசிய பூங்காவில் நமீபிய சிறுத்தை ஆஷா மூன்று குட்டிகளை ஈன்றுள்ளதாக மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேற்று தெரிவித்தார். சமூக ஊடக தளமான எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் குட்டிகளில் வீடியோ கிளிப்பை பகிர்ந்துள்ள பூபேந்தர் யாதவ், பிரதமர் நரேந்திர மோடியின் செல்ல பிராஜக்ய் திட்டமான ‘ புராஜெக்ட் சீட்டா’ வெற்றிபெற்றதாக அறிவித்தார்.
Purrs in the wild!
— Bhupender Yadav (@byadavbjp) January 3, 2024
Thrilled to share that Kuno National Park has welcomed three new members. The cubs have been born to Namibian Cheetah Aasha.
This is a roaring success for Project Cheetah, envisioned by PM Shri @narendramodi ji to restore ecological balance.
My big congrats… pic.twitter.com/c1fXvVJN4C
அந்த பதிவில், “குனோ தேசிய பூங்கா மூன்று புதிய உறுப்பினர்களை வரவேற்றுள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. நமீபிய சீட்டா ஆஷாவிற்கு குட்டிகள் பிறந்துள்ளன. சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியால் திட்டமிடப்பட்ட சீட்டா திட்டத்திற்கு இது ஒரு கர்ஜனை வெற்றி. திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து நிபுணர்களுக்கும், குனோ வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள வனவிலங்கு ஆர்வலர்களுக்கும் வாழ்த்துக்கள்” என தெரிவித்திருந்தார்.
‘ புராஜெக்ட் சீட்டா’ திட்டத்தின் கீழ் 20 சிறுத்தைகள்:
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி நமீபியாவில் இருந்து எட்டு சிறுத்தைகள் (5 பெண் மற்றும் 3 ஆண் சிறுத்தைகள்) கொண்டு வரப்பட்டு, மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டன. பின்னர் கடந்த 2023 பிப்ரவரி மாதம் மீண்டும் தென்னாப்பிரிக்காவில் இருந்து மேலும் 12 சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டன.
இதற்கு முன், நமீபிய சிறுத்தையான ஜவாலா கடந்த 2023 மார்ச் மாதம் நான்கு குட்டிகளை பெற்றெடுத்தது. அவற்றில், மூன்று குட்டிகள் ஒரு மாதத்திற்கு பின்பு இறந்தன. தொடர்ந்து பல்வேறு காரணங்களால் மார்ச் 2023 முதல் 6 குட்டிகள் இறந்தன. இதனால், தற்போது வரை மொத்த சிறுத்தைகளில் இறப்பு எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்தது.
முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் இரண்டு ஆண் சிறுத்தைகளான அக்னி மற்றும் வாயு, குனோ தேசிய பூங்காவில் இருந்து பரோண்ட் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டனர் என்று அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கால்நடை மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் 15 சிறுத்தைகள் உள்ளன. இதில் ஏழு ஆண் மற்றும் ஏழு பெண் சிறுத்தைகளும் ஒரு குட்டியும் அடங்கும்.