33% Women Reservation: மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு; பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் என தகவல்
பாராளுமன்ற சிறப்பு அமர்வு: பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் 33 சதவீதம் அல்லது மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்.

இன்று அதாவது செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மகளிருக்கான இடஒதுக்கீட்டை நிறைவேற்ற ஒப்புதல் அளித்ததாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் 33 சதவீதம் அல்லது மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது. 33 சதவீத ஒதுக்கீட்டிற்குள் எஸ்சி, எஸ்டி மற்றும் ஆங்கிலோ-இந்தியர்களுக்கு துணை இடஒதுக்கீட்டையும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்குப் பிறகும் ஒதுக்கப்பட்ட இடங்கள் மாற்றப்பட வேண்டும் என்றும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரிலேயே இது தொடர்பான மசோதா மாநிலங்களைவையில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

