மேலும் அறிய

Union Budget 2022 : மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் : இரு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத்தொடர்..

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் 2022-2023-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31-ந் தேதி தொடங்கி வரும் ஏப்ரல் 8-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. முதல் கட்ட நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் ஜனவரி 31-ந் தேதியில் இருந்து பிப்ரவரி 11-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் மார்ச் 11-ந் தேதி முதல் ஏப்ரல் 8-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Union Budget 2022 : மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் : இரு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத்தொடர்..

ஜனவரி 31ம் தேதி நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்.  பிப்ரவரி 1ம் தேதி மக்களவையில் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்வார். முதல் அமர்வில், பட்ஜெட் மீதான அடிப்படை விவாதங்கள் நடைபெறும். இரண்டாம் அமர்வில், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மானியக் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட நிலைக்குழுக்கள் ஆய்வு செய்யும். அதன் பின், மக்களவையில் 2022 நிதி மசோதா தாக்கல் செய்யப்படும்.  மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாக்கள் மாநிலங்களவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு 14 நாட்கள் கழிந்த நிலையில், அந்த மசோதா அரசியல் சாசனத்தின் 109-வது பிரிவு உட்பிரிவு 5-ன்படி நிறைவேற்றப்பட்டதாக கருதப்படும்.

 குளிர்கால கூட்டத் தொடர்: 

முன்னதாக, நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர், ஒருநாள் முன்னதாகவே கடந்த டிசம்பர் 21ம் தேதி முடித்துக்கொள்ளப்பட்டது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதற்கான மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவையில் 82 சதவீதமும், மாநிலங்களவையில் 47 சதவீதமும் மட்டுமே அலுவல்கள் நடைபெற்றுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறினார்.மக்களவையில் 9 மசோதாக்களும், மாநிலங்களவையில் 11 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். 


Union Budget 2022 : மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் : இரு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத்தொடர்..

 

டெல்லியில் கொரோனா: 

டெல்லியில், இன்னும் சில நாட்களில் கொரோனா 3வது அலை உச்சத்துக்குச் செல்லும் என்று கணிக்கப்படுகிறது. அதன் பிறகு, அதன் தினசரி பாதிப்பு குறையத் தொடங்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக,  நாடாளுமன்ற ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 1, 409 பணியாளர்களில் 402 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து,  நாடாளுமன்ற பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பாதிப்பு குறித்து குடியரசுத் துணைத்தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கைய்யா நாயுடு ஆலோசனை மேற்கொண்டார். அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்கவும், தொற்று மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும், மூத்த அலுவல் பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

 

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
Netanyahu Warns Iran: இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
MG Hybrid SUV India launch: No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
Embed widget