வெங்கையாவின் வெரிபைடு டிக்கை நீக்கிய டுவிட்டர்!

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கில் வெரிபைடு எனப்படும் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கின் வெரிபைடு பேட்ஜ்ஜை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

பிரபல சமூகவலை தள பக்கங்களில் ஒன்று டுவிட்டர். இதனை, பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம், தங்களின் கருத்துகளையும், தகவல்களையும் பதிவிட்டு வருகின்றனர். இதனால், அனைவருக்கும் இந்த சமூகவலைதள பக்கம் பெரிதும் உதவிகரமாக உள்ளது. டுவிட்டர் பக்கத்தில் சர்சையான கருத்துகளையும் வெளியிட்டால் அதனை நீக்கி, டுவிட்டரை உபயோகப்படுத்துபவரின் கணக்கையும் நீக்கி டுவிட்டர் நிறுவனம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-language-is-not-in-cowin-registration-languages-5083

இந்நிலையில், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கின் வெரிபைடு பேட்ஜ்ஜை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. அதாவது, வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. உறுதிப்படுத்தப்பட்டதற்கு அடையாளமாக குறிக்கப்படும் ப்ளூ டிக்கை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. அதே நேரத்தில் அவரின் அலுவலக கணக்கிற்கு தொடர்ந்து வெரிபைடு பேட்ஜ் இருந்து வருகிறது.

சமீபத்தில், நைஜீரிய நாட்டின் அதிபர் முகமது புஹாரி, 1960-70 வரை நைஜீரியாவில் நடைபெற்ற உள்நாட்டு சண்டையை மேற்கோள் காட்டி வன்முறையை தூண்டும் வகையில் டுவிட்டர் பக்கத்தில் கருத்துகளை பகிர்ந்திருந்தார். அவரது அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரின் இந்த டுவிட்டர் பதிவு போராட்டத்தில் ஈடுபடுவர்கள் மீது தாக்குதலை நடத்தத் தூண்டுவது போல உள்ளது எனக்கூறி அவரின் கருத்தை டுவிட்டர் பக்கத்தில் இருந்து டுவிட்டர் நிறுவனம் நீக்கியது.வெங்கையாவின் வெரிபைடு டிக்கை நீக்கிய டுவிட்டர்!

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நைஜீரியாவில் டுவிட்டருக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. நைஜீரியாவில் டுவிட்டர் செயல்பட காலவரையற்ற தடை விதிக்கப்படுவதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், மக்கள் டுவிட்டரை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.  இந்தியாவில் ஏற்கனவே டுவிட்டர்-மத்திய அரசு இடையே ஏற்பட்டுள்ள மோதல் ஒருபுறம், ரெய்வு விசாரணை என டுவிட்டர் அலுவலக கதவுகளை தட்டியிருக்கிறது டெல்லி காவல் துறை. இந்நிலையில் தான் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடுவின் டுவிட்டருக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. இது எந்த மாதிரி வினை ஏற்படுத்தும் என்பதை பொறுந்திருந்து பார்க்கலாம். இதற்கு ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிக்கவும் வாய்ப்பு உள்ளது. 

இயக்குனராகும் முன் ரூம் பாயாக பணியாற்றிய ஏ.ஆர்.முருகதாஸ்!
Tags: india Vice President Venkaiah naidu Blue Tick fired Twitter account Twitter verfied page

தொடர்புடைய செய்திகள்

PM Modi G7 Speech: G7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு..!

PM Modi G7 Speech: G7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு..!

பல்ஸ் ஆக்சிமீட்டர், சானிடைசர், வெப்பநிலை பரிசோதனைக் கருவிகளுக்கான ஜி.எஸ்.டி. குறைப்பு!

பல்ஸ் ஆக்சிமீட்டர், சானிடைசர், வெப்பநிலை பரிசோதனைக் கருவிகளுக்கான ஜி.எஸ்.டி. குறைப்பு!

Bio Weapon என்று கருத்துகூறிய நடிகை மீது தேசத்துரோக வழக்கு : நேரில் ஆஜராக போலீஸ் நோட்டீஸ்..!

Bio Weapon என்று கருத்துகூறிய நடிகை மீது தேசத்துரோக வழக்கு : நேரில் ஆஜராக போலீஸ் நோட்டீஸ்..!

Coronavirus India Updates: தொடர்ந்து குறையும் கொரோனா... ஆனாலும் அலர்ட்டா இருங்க!

Coronavirus India Updates: தொடர்ந்து குறையும் கொரோனா... ஆனாலும் அலர்ட்டா இருங்க!

சரத் பவார்- பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு: என்ன நடக்கிறது மகாராஷ்டிரா அரசியலில்?

சரத் பவார்- பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு: என்ன நடக்கிறது மகாராஷ்டிரா அரசியலில்?

டாப் நியூஸ்

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!

கோவை : 2000-க்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று! துளிர்க்கும் நம்பிக்கையில் மக்கள்!

கோவை : 2000-க்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று! துளிர்க்கும் நம்பிக்கையில் மக்கள்!