மேலும் அறிய

Cowin Tamil | கோவின் தளத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு - ராமதாஸ், சு.வெங்கடேசன் கண்டனம்

கோவின் தளத்தில் தமிழ் மொழியில் முன்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினசரி 1.50 லட்சம் என்ற அளவில் பதிவாகி வருகிறது. கடந்த மாதம் 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகி வந்த நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக தற்போது 1.5 லட்சம் என்ற அளவில் பாதிப்பு குறைந்துள்ளது. கொரோனா பரவலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறையினரும் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி தொடர்பாக அறிவுறுத்தி வருகின்றனர். இதையடுத்து, மத்திய அரசு கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு கோவின் என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இந்த இணையதளத்தில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த இணையதளம் மூலமாக தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், அந்த இணையதளத்தில் மாநில மக்கள் எளிதில் பதிவு செய்வதற்கு வசதியாக தற்போது 10 மொழிகள் இணைக்கப்பட்டுள்ளது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் இணைக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் தமிழ் மொழி இணையதளத்தில் சேர்க்கப்படவில்லை. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், “கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்வதற்கான கோவின் இணையதளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒதியா உள்ளிட்ட 10 மாநில மொழிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், உலகின் மூத்த மொழியான தமிழ் சேர்க்கப்படாததுவருத்தமளிக்கிறது!

கோவின் இணையதளத்தில் தமிழ் இல்லாததால் ஆங்கிலம் தெரியாதவர்களால் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய முடியவில்லை. கோவின் தளத்தில் தமிழையும் சேர்க்க முயற்சிகள் செய்யப்பட்ட நிலையில், உடனடியாக தமிழில் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்!”

இவ்வாறு அவர் பதிவு செய்துள்ளார்.

மேலும், மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் எழுத்தாளர் சு.வெங்கடேசனும் தனது டுவிட்டர் பக்கத்தில், "கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யும் இணையதளமான கோவின் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே இருந்த நிலையில் இன்று புதிதாக 9 மொழிகளில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது" என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் வாபஸ்..ஆனால், ஒரு ட்விஸ்ட் வைத்த வானிலை.. என்ன அது?
சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் வாபஸ்..ஆனால், ஒரு ட்விஸ்ட் வைத்த வானிலை.. என்ன அது?
வேலை முடிந்ததும் கம்பி நீட்டிய இன்ஸ்டா காதலன்.. தாலி கட்டிய கையோடு போன கணவனை தேடி போன பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
வேலை முடிந்ததும் கம்பி நீட்டிய இன்ஸ்டா காதலன்.. தாலி கட்டிய கையோடு போன கணவனை தேடி போன பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
P. Wilson : ’OBC இடஒதுக்கீட்டு உரிமையை மீட்டெடுத்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துக’ பிரதமர் மோடிக்கு திமுக எம்.பி. வில்சன் வலியுறுத்தல்..!
P. Wilson : ’OBC இடஒதுக்கீட்டு உரிமையை மீட்டெடுத்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துக’ பிரதமர் மோடிக்கு திமுக எம்.பி. வில்சன் வலியுறுத்தல்..!
மதுரை தனிஷ்க் கொள்ளை: ரூ.15 கோடி நகைகள் முழு மீட்பு! மூவர் கைது, மேலும் பலருக்கு தொடர்பா?
மதுரை தனிஷ்க் கொள்ளை: ரூ.15 கோடி நகைகள் முழு மீட்பு! மூவர் கைது, மேலும் பலருக்கு தொடர்பா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து எம்.எஸ்.தோனி ஒய்வு
ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து எம்.எஸ்.தோனி ஒய்வு
TVK vs DMK:
TVK vs DMK: "ரீபோஸ்ட் நிதி.. சீனியர் அபுயூசர்.. பெண்களை மதிக்கத் தெரியாத கட்சி திமுக.." சரமாரியாக விமர்சித்த தவெக
Gold Rate: 11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
"முதலமைச்சருக்கு அரோகராவா? ஒழுங்கு மரியாதையா மன்னிப்பு கேளுங்க" - சீமான் விடுத்த கடும் எச்சரிக்கை
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
Karthigai:
Karthigai: "சுவாமியே... சரணம் ஐயப்பா.." பிறந்தது கார்த்திகை மாதம்! காலை முதல் மாலை அணியும் பக்தர்கள்!
“தனுஷ், திரிஷாவுக்கு ஒரு ஓட்டு கூடப் போடாதீங்க” - தனியரசு பேச்சால் பரபரப்பு
“தனுஷ், திரிஷாவுக்கு ஒரு ஓட்டு கூடப் போடாதீங்க” - தனியரசு பேச்சால் பரபரப்பு
Embed widget