TTF vasan: மீண்டும் ஒரு சர்ச்சை? திருப்பதி கோயிலில் வேடிக்கை! வசமாக சிக்கும் டிடிஎஃப் வாசன்? என்ன நடந்தது?
TTF vasan Tirupati Temple Prank Video: வழக்கமாக சர்ச்சைகளில் சிக்குவதற்கு பெயர் போன டிடிஎஃப் வாசன் தற்போது புது சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர்களிடம் வேடிக்கை செய்து வீடியோ வெளியிட்ட டிடிஎஃப் வாசனுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். பைக் ரைடில் ஆர்வம் கொண்ட டிடிஎஃப் வாசன் சிறார்களை கவர்வதற்கு பைக் ஓட்டும்போது பல வித்தைகளை காட்டி வாண்டடாக வழக்குகளை சந்திக்கும் பிரபலம் என்றால் அதில் இவருக்கு நிகர் இவரே.
இவ்வாறு வித்தை காட்ட போய் டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கி அவருக்கு கை, கால்கள் உடைந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது. இதற்காகவும் வழக்கை சந்தித்து, நீதிமன்றம் ஏறி இறங்கி இருச்சக்கர வாகன ஓட்டும் உரிமத்தை ரத்து செய்து நீதிபதி அதிரடி உத்தரவும் பிறப்பித்துள்ளார்.
இதனால் தற்போது எங்கு சென்றாலும் காரில் தான் விஜயம் மேற்கொள்கிறார் டிடிஎஃப் வாசன். இவ்வளவு பிரபலமாக இருக்கும் டிடிஎஃப் வாசன், தற்போது புது சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். அதற்கு ஆதாரம் அவர் வெளியிட்ட வீடியோ தான். டிடிஎஃப் வாசன் தனது நண்பர்களுடன் திருப்பதிக்கு ட்ரிப் அடித்துள்ளார். இதுகுறித்த வீடியோவை தனது யூடியூபின் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
39.52 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவில்தான் அவர் செய்த சர்ச்சைகளும் இடம்பெற்றுள்ளன. அதைமட்டும் பார்வையாளர்கள் தனியாக 32.20 என்ற நிமிடத்துடன் குறிப்பிட்டு கமெண்ட்டில் கழுவி ஊற்றி வருகின்றனர்.
பொதுவாக திருப்பதி கோயிலுக்கு சென்றால் ஏழுமலையான் தரிசனத்திற்காக ஒரு கூண்டில் பக்தர்கள் காத்துக்கிடப்பார்கள். எப்போது கூண்டை திறப்பார்கள்? எப்போது ஏழுமலையானை தரிசிப்போம் என கும்பலாக காத்திருப்பார்கள்.
ஆனால் அந்த நேரத்திலும் டிடிஎஃப் வாசன் தனது வேடிக்கை வீடியோவுக்காக சில சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.
அதாவது நண்பர்களுடன் திருப்பதி கோயிலுக்கு சென்ற டிடிஎஃப் வாசன் காத்துக்கிடந்த பக்தர்கள் முன்பு அடைக்கப்பட்டிருந்த கூண்டை திறப்பதுபோல் செய்கை செய்துள்ளார். உடனே பக்தர்கள் கூண்டை திறக்கிறார்கள் போல என நினைத்து கோவிந்தா கோவிந்தா என கோஷத்துடன் இடத்தைவிட்டு நகர்கின்றனர்.
இதுகுறித்த காட்சி டிடிஎஃப் வாசன் பகிர்ந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கிறது. அதாவது சரியாக 32.20 நிமிடத்தில் இதுகுறித்த காட்சி இடம்பெற்றுள்ளது. இதை குறிப்பிட்டு கமெண்ட்டில் பார்வையாளர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். மேலும் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதில் ஒரு பயனர் “வீணாய் போய்ட்டு வம்புல மாட்றீங்கடா... வாசன் இதை யூடியூப்ல இப்படி பண்ணுனது தப்புன்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க” என தெரிவித்துள்ளார்.
மற்றொரு பயனர் “வாசன் ப்ரோ இது தப்பு... ரொம்ப ரொம்ப தப்பு” என தெரிவித்துள்ளார்.
மேலும் ஒருவர், “ஏன்டா உங்களுக்கு எல்லாம் காமடியா தெரியுதா? அங்க எவ்ளோ பேரு ரொம்ப நேரம் காத்திட்டு இருப்பாங்க! உனக்கு காசு இருக்குனு சுலபமா உள்ள போய்ட்டீங்க! எல்லாம் திமிரு. அதுல ஒரு அம்மா கேட்டு தொரக்குராங் எந்திரிங்கனு சொல்ராங்க! அடுத்த நிமிசமே ஏமாத்திட்ட” என சாடியுள்ளார்.