Arpita Ghosh | ''நான் மக்களுக்கு சேவை செய்யணும்..'' திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி ராஜினாமா.!
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் அர்பிதா கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் அர்பிதா கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது கட்சிக்காக மேற்கு வங்கத்திலிருந்தே பணி செய்யப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
நாடக கலைஞரான அர்பிதா கோஷ் கடந்த 2020 மார்ச் மாதத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஜூலை- ஆகஸ்ட் நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின்போது அவையின் மரபுகளை மீறியதாகக் கூறி அக்கட்சியின் 6 எம்பிக்களோடு சேர்த்து அர்பிதா கோஷும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இன்னும் 5 ஆண்டுகள் பதவி உள்ள நிலையில் தற்போது ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், மேற்கு வங்கத்திலிருந்து பணி செய்வதன் மூலம் கூடுதலாக மக்கள் சேவையாற்ற முடியும் என்றும் தெரிவித்தார். மேலும் மாநில அளவில் ஏதேனும் பொறுப்புகளை வழங்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அக்கட்சியின் மூத்த தலைவர் சுகேந்து சேகர், செய்தியாளர்களிடம் பேசியபோது, கோஷின் ராஜினாமா கட்சியின் முடிவு என்றும், அடுத்தடுத்து தங்களது கட்சியில் பல்வேறு மாற்றங்களை செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிக்கபோலீசார் சல்யூட் அடிக்க மாட்டீங்களா? சர்ச்சையில் சிக்கிய நடிகரும், எம்பியுமான சுரேஷ் கோபி
மரபையே மாற்றுகிறார் - பிரதமர் மோடிக்கு டைம் பத்திரிகை கொடுத்த விமர்சனம்
முன்னதாக, கடந்த சட்டசபை தேர்தலின்போது போட்டியிட்ட புனியா தான் வெற்றி பெற்றதையடுத்து தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்த இடம் காலியானதை அடுத்து சுஷ்மிதா தேவை மாநிலங்களவைக்கு நடைபெறும் இடைத்தேர்தலுக்கு வேட்பாளராக தேர்வு செய்துள்ளது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி. முன்னாள் மக்களவை உறுப்பினரான இவர் கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. மாநிலங்களவை தேர்தல் வரும் அக்டோபர் 4ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், தனது ராஜினாமா குறித்து பேசுகையில், தனது கட்சிக்காக மேற்கு வங்கத்திலிருந்து நேரடியாக பணி செய்யப் போவதாகவும், அதன் மூலம் மக்களுக்கு இன்னும் நெருக்கமாக சேவையாற்ற முடியும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
Tata Sons on Air India:ஏர் இந்திய விமான நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் குழுமம் முன்வந்தது