மேலும் அறிய

Suresh Gopi | போலீசார் சல்யூட் அடிக்க மாட்டீங்களா? சர்ச்சையில் சிக்கிய நடிகரும், எம்பியுமான சுரேஷ் கோபி!

போலீஸிடம் சல்யூட் கேட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் மலையாள திரைப்படத்தின் முன்னணி நடிகரும் எம்.பியுமான சுரேஷ் கோபி.

போலீஸிடம் சல்யூட் கேட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் மலையாள திரைப்படத்தின் முன்னணி நடிகரும் எம்.பியுமான சுரேஷ் கோபி. சுரேஷ் கோபிநாதன் நாயர் என்ற முழுப் பெயரின் சுருக்கமே சுரேஷ் கோபி என்பதாகும். இவர் மலையாள திரைப்பட நடிகர் ஆவார். தமிழில் சமஸ்தானம், தீனா, ஐ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பாஜகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பியாக உள்ளார். இந்நிலையில் நேற்று  திரிச்சூர் மாவட்டம் புத்தூர் கிராமத்தில் உள்ள பழங்குடியின கிராமத்தில் புயல் பாதிப்பு பற்றி ஆய்வு செய்யச் சென்றிருந்தார். 

ஜீப்பில் சென்றபோது ஒல்லூர் காவல் துணை ஆய்வாளரைப் பார்த்து தனக்கு சல்யூட் அடிக்கச் சொல்லியுள்ளார். சுரேஷ் கோபி ஜீப்பில் இருந்து கொண்டே சல்யூட் அடிக்கச் சொன்னது தான் சர்ச்சையாகி உள்ளது. 
அப்போது சுரேஷ் கோபி, நான் எம்.பி. எனக்கு மரியாதை கொடுக்க வேண்டும். சல்யூட் அடியுங்கள் என்று கூறியுள்ளார்.இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது. 

இது குறித்து சுரேஷ் கோபி மாத்ருபூமி செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், "கேரள அரசு எம்.பி.களுக்கு சல்யூட் அடிக்கக் கூடாது என போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தால், அந்த உத்தரவை முதலில் ராஜ்யசபா சேர்மனுக்கு அனுப்ப வேண்டும். பின்னர் ராஜ்யசபா உறுப்பினர்களுக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் எனக்குத் தெரிந்து கேரளாவில் அப்படி ஏதும் உத்தரவில்லை என நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Suresh Gopi | போலீசார் சல்யூட் அடிக்க மாட்டீங்களா? சர்ச்சையில் சிக்கிய நடிகரும், எம்பியுமான சுரேஷ் கோபி!

நான் போலீஸ்காரரை சல்யூட் அடிக்க வைத்தேன் என்ற தலைப்பில் செய்திகள் வெளியாவதே கூட திட்டமிட்ட செயல். நான் அந்தக் காவலரை சார் என்று மரியாதையாகவே அழைத்தேன் என்றும் கூறியுள்ளார்.

இன்னொரு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், "நான் ஒரு ஜீப்பைப் பார்த்தேன். முதலில் அது வனத்துறை ஜீப் என்றே நினைத்தேன். அப்புறம் தான் அது போலீஸ் வாகனம் என்று தெரிந்து கொண்டேன். பின்னர் அதிலிருந்து இறங்கிய போலீஸ்காரரிடம் நான் ஒரு எம்.பி. எனக்கு சல்யூட்டுக்கான தகுதி இருக்கிறது சார் என்று தாழ்மையாகவேக் கூறினேன்" என்று தெரிவித்தார்.

இது குறித்து கேரள காவல் அதிகாரிகள் கூட்டமைப்பு கூறுகையில், எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டும் என்று சட்டரீதியாக ஏதும் உத்தரவில்லை. ஆனாலும் காவல்துறையினர் மரியாதையின் நிமித்தமாக அவர்களுக்கு சல்யூட் வைக்கின்றனர். அப்படி இருக்கும் போது சுரேஷ் கோபி அதிகாரியிடம் இவ்வாறு நடந்து கொண்டுள்ளது ஏற்புடையதல்ல என்று தெரிவித்தார்.

Tamilnadu NEET : அரசின் நீட் விலக்கு மசோதா வெறும் கானல்நீரா? சட்டம் சொல்வதென்ன? - ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget