Morning Headlines: அதிமுக கூட்டணியில் உறுதியாகிறதா தொகுதி பங்கீடு? வேட்புமனு தாக்கல் கட்டுப்பாடுகள்.. முக்கியச் செய்திகள்..
Morning Headlines March 20: இந்தியாவில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்..? அதிமுக கூட்டணியில் இன்று உறுதியாகிறதா தொகுதி பங்கீடு..?
மக்களவை தேர்தலுக்கான தேதி கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து பெரும்பான்மையை நிரூபிக்க துடிக்கிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்ற திமுக கட்சி, மக்களவை தேர்தலிலும் வெற்றியை உறுதிசெய்ய கடுமையாக முயற்சி செய்து வருகிறது. அதன் அடிப்படையில், திராவிட முன்னேற்ற கழகம் காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தொகுதி பங்கீட்டையும் ஒப்பந்தம் செய்தது. மேலும் படிக்க..
- மக்களவை தேர்தல் இன்னும் சில வாரங்களில்.. இன்று தேர்தல் அறிக்கை, வேட்பாளர் பட்டியலை வெளியிடும் திமுக!
கடந்த சனிக்கிழமை இந்திய தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தலுக்கான தேதியை வெளியிட்டது. அதன் அடிப்படையில், இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19ம் தேதியே முதல் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளதால் திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க தீவிரமான பணியில் ஈடுபட்டு வருகின்றன. மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி வருகின்ற 27ம் தேதி நடக்கிறது. மேலும் படிக்க..
-
5 பேருக்கு மட்டுமே அனுமதி.. வேட்புமனு தாக்கல் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கவுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 30 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பரப்புரையில் ஈடுபட தொடங்கி விட்டது. இப்படியான நிலையில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை இன்று முதல் தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..
- அருணாச்சல பிரதேசத்தை பங்கு போடும் சீனா: எதிர்க்குரல் எழுப்பிய இந்தியா - என்ன நடந்தது?
அருணாச்சல் பிரதேசத்துக்கு பிரதமர் மோடி வருகை தந்தமைக்கு கண்டனம் தெரிவித்த சீனாவுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி மார்ச் 9 ஆம் தேதி வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்றார். அப்போது பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது அருணாச்சல் பிரதேசம் சென்ற பிரதமர் மோடி, செலா சுரங்கப்பாதையை தொடங்கி வைத்தார். இந்த சுரங்கப்பாதையானது அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் பயணம் தூரம் குறையும் மற்றும் நேரம் குறைவதோடு, ராணுவ தளவாடங்களை எடுத்துச் செல்ல ஏதுவாகவும் உள்ளது. மேலும் படிக்க..
- “கேரள ரசிகர்களுக்கு சமர்ப்பணம்” - கெத்து காட்டிய விஜய்.. ஜாலியாக ஒரு செல்ஃபி!
கேரளா சென்றுள்ள நடிகர் விஜய் அங்குள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் ரசிகர்களை சந்தித்தோடு மட்டுமல்லாமல் அவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். இவர் லியோ படத்துக்குப் பின் தற்போது G.O.A.T என்ற படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மீனாட்சி சௌத்ரி ஹீரோயினாக நடிக்கும் கோட் படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் படிக்க..