Morning Headlines: இன்று மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு! பீகார் அமைச்சரவை விரிவாக்கம் - முக்கியச் செய்திகள்..
Morning Headlines March 16: இந்தியாவில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- ஹாப்பி நியூஸ்! அரசு பேருந்துகளில் புக் பண்ணப்போறீங்களா? கால அவகாசம் அதிகரிப்பு
தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு காலத்தை நீட்டித்து போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பேருந்து, ரயில், விமானம், கப்பல் ஆகியவை இந்தியாவின் மிக முக்கிய போக்குவரத்து சாதனங்களாக திகழ்கிறது. இதில் ரயில்கள் மின்சார ரயில், விரைவு ரயில், பாசஞ்சர், அதிவிரைவு என பல வகைகளில் கட்டண வித்தியாசத்தில் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்துகள் சாதாரணம், விரைவு, அதிவிரைவு ஆகிய முறைப்படியே இயக்கப்பட்டு வருகிறது. என்னதான் சொந்தமாக வாகனங்கள் வைத்திருந்தாலும் எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பொதுபோக்குவரத்தில் பயணிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் படிக்க..
- அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம் யாருக்கு? யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் இன்றைய தீர்ப்பு, ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரில் யாருக்கு சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ. பன்னீர் செல்வம் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேநேரம், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவுடன், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் காரணமாக கட்சி மற்றும் சின்னம் ஆகியவை எடப்பாடி தரப்பிற்கு சென்றது. மேலும் படிக்க..
- இன்று அறிவிக்கப்படுகிறது மக்களவைத் தேர்தல் தேதி - முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில்?
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், முதல் கட்டட்திலேயே தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதுள்ள 17வது நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம், வரும் ஜுன் 16ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அதற்கு முன்னதாக புதிய மக்களவைக்கான தேர்தல் நடைபெற வேண்டும். அந்த வகையில் 18வது மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது. இதற்காக தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தலைமையில், புதியதாக தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட சுக்பிர் சிங் சந்து மற்றும் க்யானேஷ் குமார் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கின்றனர். மேலும் படிக்க..
- பீகார் அமைச்சரவை விரிவாக்கம்.. 6 புது முகங்கள் உள்பட 21 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பீகாரில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நிதிஷ் குமார் அரசாங்கத்தில் 21 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். அமைச்சரவை விரிவாக்கத்தை தொடர்ந்து, பீகார் ஆளுநர் மாளிகையில் இன்று பதவியேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. அதில், 12 பாஜக எம்எல்ஏக்கள், அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால், 12 பேரில் 6 பேர் முதல்முறை அமைச்சர்கள் ஆவர். பாஜகவை சேர்ந்த மங்கள் பாண்டே, அருணா தேவி, நீரஜ் பப்லு, நிதிஷ் மிஸ்ரா, நிதின் நவீன், ஜனக் ராம், கேதார் குப்தா, திலீப் ஜெய்ஸ்வால், ஹரி சாஹ்னி, கிருஷ்ணா நந்தன் பாஸ்வான், சுரேந்திர மேத்தா, சந்தோஷ் சிங் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். மேலும் படிக்க..