Morning Headlines: மத்திய அரசை கேள்விகேட்ட உச்சநீதிமன்றம்.. தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்.. முக்கியச் செய்திகள்..
Morning Headlines February 20: இந்தியாவில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது பத்தி பேசுறீங்க.. இதை பண்ணுங்க.. மத்திய அரசை கேள்விகேட்ட உச்சநீதிமன்றம்
பாதுகாப்பு படைகளில் ஒருவர் ஓய்வு பெறும் வரை பணியாற்றுவதே நிரந்தர கமிஷன் (Permanent Commission) எனப்படும். இதன் கீழ் பாதுகாப்பு படைகளில் பணியில் சேருபவர்கள், தாங்கள் ஓய்வு பெறும் வரை நாட்டுக்கு பணியாற்றலாம். ஆனால், இந்த நிரந்தர கமிஷன் கீழ் ஆண் அதிகாரிகள் மட்டுமே பணியில் சேர்க்கப்பட்டு வந்தனர். அதேபோல, குறுகிய சேவை ஆணையத்தின் கீழ் ஒருவர் 14 ஆண்டுகள் வரை பணியாற்றலாம். இதன் கீழ் பணியல் சேரும் ஆண் அதிகாரிகள், பணிக்காலம் முடிந்ததும் நிரந்தர கமிஷனை தேர்வு செய்யலாம். அல்லது ஓய்வு பெறலாம். ஆனால், குறுகிய சேவை ஆணையத்தின் கீழ் பணியில் சேரும் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர கமிஷனில் இணைய வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது. மேலும் படிக்க..
- தமிழகம் வருகிறது ஜெயலலிதாவின் தங்க, வெள்ளி நகைகள் - ஏன்? எப்போது தெரியுமா?
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட, தங்க மற்றும் வைரக் நகைகள் 6 பெட்டகங்களில் தமிழகம் கொண்டு வரப்பட உள்ளன. சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேருக்கு, கடந்த 2014ம் ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேல்முறையீட்டு மனுவின் விசாரணையின் முடிவில் ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மற்ற மூவரை குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் படிக்க..
- 5 வருட திட்டம் வேண்டாம் - மத்திய அரசின் பரிந்துரையை நிராகரித்த விவசாயிகள் : போராட்டம் தொடரும் என அறிவிப்பு
டெல்லியை நோக்கி செல்லும் தங்களது போராட்டம் நாளை தொடரும் என, விவசாய சங்கங்கள் அற்வித்துள்ளன. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஒரு வாரமாக மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியை முற்றுகையிடும் நோக்கில், பஞ்சாப் மற்றும் ஹரியான எல்லைகளில் விவசாயிகள் குவிந்துள்ளனர். போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் சேர்ந்து, விவசாயிகள் டெல்லி எல்லைக்குள் நுழைவதை தொடர்ந்து தடுத்து வருகின்றனர். இதனால் ஏற்பட்ட மோதலில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த சிலர் படுகாயமடைந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. மேலும் படிக்க..
- தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் - விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?
தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெடை, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். அதில் 7 அம்சங்களில் பல்வேறு தரப்பினருக்கான திட்டங்கள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தன. இந்நிலையில் இன்று, தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். திமுக தலைமையில் 2021ம் ஆண்டு ஆட்சி அமைந்ததுமே முதலே, தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க..