Morning Headlines: பக்தி பரவசமாக்கும் அயோத்தி கோயில் கருவறை! பி.எஸ்.பி. எம்.பி. கட்சியில் இருந்து நீக்கம் - முக்கியச் செய்திகள்
Morning Headlines: கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- பக்தி பரவசமாக்கும் அயோத்தி கோயில் கருவறை! ராம ஜென்மபூமி அறக்கட்டளை வெளியிட்ட புதிய புகைப்படம்!
இன்னும் மூன்று மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயிலின் கருவறை புகைப்படங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளரும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் துணைத் தலைவருமான சம்பத் ராய், எக்ஸ் வலைதள பக்கத்தில், புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் படிக்க..
- பா.ஜ.க. வசை சொற்களுக்கு ஆளான பி.எஸ்.பி. எம்.பி. டேனிஷ் அலி - கட்சியில் இருந்து நீக்கிய மாயாவதி
கடந்த செப்டம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின்போது, பகுஜன் சமாஜ் கட்சி எம்பி டேனிஷ் அலியை நோக்கி பாஜக எம்பி ரமேஷ் பிதுரி, கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினார். இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த அவரை தீவிரவாதி என குறிப்பிட்டு பேசினார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான டேனிஷ் அலி, நாடாளுமன்றத்தில் அனைவரின் முன்பும் அழுதார். இந்த சம்பவம் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பியது. பகுஜன் சமாஜ் கட்சி எம்பி டேனிஷ் அலிக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு குரல் கொடுத்தனர். ராகுல் காந்தி உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள், டேனிஷ் அலியை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் படிக்க..
- "அது என் கையெழுத்து இல்ல" ஹமாஸ் விவகாரத்தில் அமைச்சர் பெயரில் வெளியான போலி பதில் - நாடாளுமன்றத்தில் சர்ச்சை
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நடந்து வரும் போர் உலகளவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. தாக்குதலை ஹமாஸ் அமைப்பு தொடங்கியிருந்தாலும் அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில், போர் விதி மீறல்களில் இஸ்ரேல் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த விவகாரத்தில் நடுநிலையான போக்கையே இந்தியா எடுத்து வருகிறது. ஹமாஸ் நடத்திய தாக்குதலை கண்டித்த அதே சமயத்தில், பாலஸ்தீனியர்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார்.மேலும் படிக்க..
- திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமாக கருதப்படாது - அலகாபாத் உயர்நீதிமன்றம் பகீர்..
உத்திரபிரதேசத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு பெண் ஒருவர், தனது கணவ்ர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். தனது கணவர் செய்த கொடுமையால் திருமண வாழ்க்கை முற்றிலுமாக சிதைந்துவிட்டது என்றும் தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வன்முறைக்கு உட்படுத்தியதாக தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். தனது கணவர் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்டதாகவும், இதன் விளைவாக அவரது அந்தரங்க உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் படிக்க..
- மாதவிடாய் வயிற்று வலிக்கு இந்த மருந்தை பயன்படுத்தறீங்களா? எச்சரிக்கை விடுத்த ஐபிசி
மாதவிடாய் வலி மற்றும் முடக்கு வாதத்திற்கு பொதுவாக பயன்படுத்தப்படும் வலி நிவாரணியான மெஃப்டலின் உட்கொள்வதால் ஏற்படும் எதிர்விளைவுகளைக் கண்காணிக்க சுகாதார நிபுணர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இந்திய மருந்தக ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. முடக்கு வாதம், கீல்வாதம், டிஸ்மெனோரியா, லேசான முதல் மிதமான வலி, வீக்கம், காய்ச்சல் மற்றும் பல் வலி ஆகியவற்றின் சிகிச்சையில் மெஃபெனாமிக் அமில வலி நிவாரணி பரிந்துரைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய மருந்தக ஆணையம் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் படிக்க..