National Headlines: ஜி.எஸ்.எல்.வி. எப். 12.. மத்தியபிரதேசம்தான் டார்கெட்..! இந்தியாவின் முக்கிய நிகழ்வுகள் என்னென்ன?
ABP Nadu India News: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலை செய்திகளில் காணலாம்.
- கர்நாடகாவை தொடர்ந்து மத்திய பிரதேசத்தை குறி வைக்கும் காங்கிரஸ்..150 தொகுதிகளை தட்டி தூக்க சூப்பர் திட்டம்... வியூகம் அமைத்த ராகுல் காந்தி..!
கர்நாடகாவில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தை குறி வைத்துள்ளது காங்கிரஸ். ஐந்தாண்டு பதவி காலத்திற்கு நடுவே ஆட்சி கவிழ்ந்தாலும் கர்நாடகாவை போன்று மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது காங்கிரஸ். டெல்லியில் செய்தியாளர்களிடம் மத்திய பிரதேச தேர்தல் குறித்து பேசிய ராகுல் காந்தி, "இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவோம் என காங்கிரஸ் நம்பிக்கையுடன் உள்ளது. நாங்கள் நீண்ட நேரம் விவாதித்தோம். கர்நாடகாவில் 136 இடங்களில் வெற்றி பெறுவோம் என உட்கட்சியில் கணித்தோம். தற்போது, மத்தியப் பிரதேசத்தில் 150 இடங்களைப் பெறப் போகிறோம் என்பது எங்கள் கணிப்பு" என்றார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/rahul-gandhi-on-upcoming-madhya-pradesh-election-says-congress-will-win-150-seats-120192
- மைசூருவில் பயங்கர விபத்து... இன்னோவா கார், பேருந்து நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் உயிரிழப்பு.. .
கர்நாடக மாநிலம் மைசூருவில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. நரசிங்கபுரத்தில் இன்னோவா கார், பேருந்து நேருக்கு நேர் மோதி கொண்டதில் இரண்டு குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். இன்னோவா காரில் இருந்து ஒருவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/mysuru-accident-10-dead-in-innova-bus-head-on-collision-in-tnarsinghpura-120200
- டெல்லி பயங்கரம்...16 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சம்பவம்...இளைஞர் அதிரடி கைது..!
டெல்லி ஷஹபாத் டெய்ரி என்ற பகுதியில் 16 வயது சிறுமியை சாஹில் என்ற 20 வயது இளைஞர் சரமாரியாக தாக்கியுள்ளார். தெருவில் இருவரும் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு இளைஞர் சாஹில் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த சிறுமியை குத்தியுள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/16-year-old-girl-murder-case-accused-sahil-arrested-in-delhi-know-more-details-here-120170
- ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த மல்யுத்த வீரர்களுக்கு அனுமதி இல்லை... டெல்லி காவல்துறை அதிரடி அறிவிப்பு..!
நாட்டுக்காக ஒலிம்பிக் போட்டிகளிலும் காமன்வெல்த் போட்டிகளிலும் விளையாடிய மல்யுத்த வீரர்களை, டெல்லி காவல்துறை தாக்குவது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள், கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி காவல்துறை நேற்று வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த மல்யுத்த வீரர்களுக்கு அனுமதி இல்லை என டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/wrestlers-will-not-be-allowed-to-protest-at-jantar-mantar-says-delhi-police-120156
- GSLV F12: விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி எப் 12...பயன்பாடுகள் என்னென்ன...?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஜி.எஸ்.எல்.வி எப்.12 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-1 என்ற வழிகாட்டு செயற்கைக்கோளை ஏந்திக்கொண்டு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/the-indian-space-research-organization-successfully-launched-the-navigation-satellite-nvs-1-at-exactly-10-42-am-on-a-gslv-rocket-120103