National Headlines: “கொரோனா எச்சரிக்கை முதல் பி.எஸ்.எல்.வி.சி-55 ராக்கெட் வரை” - இந்தியாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்..!
ABP Nadu India News: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலை செய்திகளில் காணலாம்.
-
அச்சுறுத்தும் கொரோனா; கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள் - தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்.!
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக 8 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழ்நாடு, கேரளா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்ரா, ஹரியானா, கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். குறிப்பாக மாவட்ட வாரியாக கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
-
கலவரத்தால் சிக்கி தவிக்கும் சூடான்.. பாதுகாப்பாக உள்ளனரா இந்தியர்கள்? பிரதமர் மோடி அவசர கூட்டம்..!
சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளிடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சூடானில் உள்ள நிலவரங்களை உன்னிப்பாக கண்காணித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் படிக்க
-
துபாயில் இருந்து இந்தியா வரும் விமான டிக்கெட் விலைகள் அதிரடி குறைப்பு..!
ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
-
மாணவர்களே! பள்ளிகளில் யாருக்கெல்லாம் இடம்?- பட்டியல் வெளியிட்ட கேந்திரிய வித்யாலயா
நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1ஆம் வகுப்பில் சேர்வதற்கான மாணவர் சேர்க்கை குறித்த பட்டியலை கேந்திரிய வித்யாலயா சங்கதன் வெளியிட்டுள்ளது. பெற்றோர்கள் https://www.education.gov.in/kvs/ என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்களை அறியலாம். தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இதில் 14.35 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
-
சிங்கப்பூர் செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.சி-55 ராக்கெட்..!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ சார்பில், பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. சிங்கப்பூரின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான TELEOS-02 செயற்கைக்கோள் இந்த ராக்கெட்டில் இடம் பெறுகிறது. பி.எஸ்.எல்.வி.சி-55 ராக்கெட்டுக்கான 25 மணி நேரம் 30 நிமிட கவுண்ட்டவுன் நேற்று பகல் 12.49 மணிக்கு தொடங்கியது. மேலும் படிக்க