ரம்ஜான் பம்பர் பரிசு…! துபாயில் இருந்து இந்தியா வரும் விமான டிக்கெட் விலைகள் அதிரடி குறைப்பு..!
குறைக்கப்பட்ட விமானக் கட்டணங்கள் காரணமாக 2023 ரம்ஜான் விடுமுறை நாட்களில் துபாயில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
2023 ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானக் கட்டணங்கள் குறைந்துள்ளன. எகானமி வகுப்புக் கட்டணம் ஜூன் 20 வரை சராசரியாக ரூ.16,435 வரை இருக்கும். ஜூன் 21 முதல், கட்டணம் உயரும். உச்ச கோடை விடுமுறை காலத்தில் ரூ.58,407 வரை செல்லும்.
விமான டிக்கெட் விலை குறைப்பு
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் கோ ஏர் நிறுவனங்களால் தொடங்கப்பட்ட புதிய விமானங்கள், லாபகரமான பாதையில் செல்வதால் இந்த கட்டண குறைப்பு ஏற்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட விமானக் கட்டணங்கள் காரணமாக 2023 ரம்ஜான் விடுமுறை நாட்களில் துபாய் மற்றும் இந்தியாவிற்கு இடையேயான வழித்தடத்தில், அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணம் செய்யும் வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
பல பயணிகளுக்கு, குறிப்பாக இந்தியாவில் உள்ள தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பார்க்க வருபவர்களுக்கு, இந்தக் கட்டணக் குறைவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இந்தியர்கள் பலருக்கும், இது ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது, கோடை விடுமுறைக்கு விமானக் கட்டணங்கள் குறித்த கவலை இன்றி, இந்தியா வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிக்கெட் விலை
ஏப்ரல் 19 முதல் 24 வரையிலான பயணத்திற்காக மும்பைக்கு திரும்புவதற்கான எகானமி டிக்கெட், பிப்ரவரி-மார்ச் வரை சராசரியான Dh1,100 (ரூ.24,597) இலிருந்து Dh931 (ரூ.20,818) வரை குறைந்த விலையில் கிடைக்கிறது. இதேபோல், அதே தேதிகளில் பயணம் செய்வதற்கான டெல்லி டிக்கெட்டுகள் மார்ச் மாதத்தில் Dh1,350 ஆக இருந்தது. தற்போது, Dh1,058 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தென்னிந்திய விமான டிக்கெட்டுகள்
வழக்கமாக விலையுயர்ந்த தென்னிந்தியத் டிக்கெட்டுகள் கூட குறைந்துள்ளன. ஏப்ரல் 18-24 க்கு இடையில் துபாயில் இருந்து கொச்சிக்கு விமான கட்டணம் Dh1,310 (ரூ.23,658) விலையில் விற்கப்படுகிறது. இது ஒரு மாதத்திற்கு முன்பு Dh2,085 (ரூ.46,623) ஆக இருந்தது. துபாய்-பெங்களூரு கட்டணங்களும் முந்தைய விளையான Dh1,430 (₹31,976) இலிருந்து Dh1,101 (₹24,619) ஆக குறைந்துள்ளது.
சிறிய நகரங்களுக்கான கட்டணம்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவில் உள்ள பெருநகரங்கள் அல்லாத நகரங்களுக்கு பல விமானங்களை அறிமுகப்படுத்தியதால், பயணக் கட்டணம் குறைவதாகக் கருதுகின்றனர். பட்ஜெட் விமான நிறுவனம் கோவா-துபாய் செக்டரில் நான்கு வாராந்திர நேரடி விமானங்களை அறிமுகப்படுத்தியது.
மார்ச் 31 அன்று இந்தூர்-சார்ஜா வழித்தடத்தில் அதன் தொடக்க சேவையைத் தொடங்கியது. ஷார்ஜா-இந்தூர் விமானம் வாரத்திற்கு மூன்று முறையும், துபாய்-இந்தூர் வாரத்திற்கு ஒரு முறையும் இயக்கப்படுகிறது. இதேபோல், பட்ஜெட் கேரியர் கோ ஏர், துபாயில் இருந்து கேரளாவில் உள்ள கண்ணூருக்கு தினசரி இடைநில்லா விமானத்தை த335 (ரூ.7,493) என குறைந்த கட்டணத்துடன் தொடங்கியது. எதிஹாட் ஏர்வேஸின் கோடைகால ஆரம்ப விற்பனையும் கட்டணங்களைக் குறைக்க உதவியது, அபுதாபியில் இருந்து மும்பைக்கு எகானமி ரிட்டர்ன் விமானக் கட்டணம் ஏப்ரல் 18-24 வரை Dh695 (ரூ.15,563) க்கு கிடைக்கிறது. இது மார்ச் மாதத்தில் Dh1,205 (ரூ.26,945) ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.