Top 10 News Headlines: 8வது இடத்தில் நீரஜ் சோப்ரா, அமெரிக்காவின் ஆதிக்கம், ஸ்பெயின் அபாரம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines Today Sept 19th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

வேலுநாச்சியார் சிலை திறப்பு
சென்னை கிண்டி காந்தி மணி மண்டபத்தில் நிறுவப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியாரின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து, மாநில நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.
திமுக மீது மக்களுக்கு வெறுப்பு
திமுகவிற்கு ஒரே மாற்று சக்தி அதிமுகதான்; இது காலம் காலமாக மக்கள் கொடுக்கும் தீர்ப்பு. தமிழகத்தின் முதுகெலும்பை உடைத்துவிட்டு தலைகுனிய விடமாட்டேன் என்கிறார்கள்; ஸ்டாலின் ஆட்சி மீது மக்களுக்கு மிகப்பெரிய வெறுப்பு ஏற்பட்டுள்ளது - அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
நடிகர் ரோபோ சங்கருக்கு இரங்கல்
நகைச்சுச்வை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமான நிலையில், திரைத்துறை மற்றும் அரசியலைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அவரது உடலுக்கு இன்று மாலை இறுதி மரியாதை செலுத்தப்பட உள்ளது.
இந்தியாவிற்கு தாக்கம்
ஈரானில் உள்ள சாபஹார் துறைமுகத்துக்கு அளிக்கப்பட்டு வந்த பொருளாதார தடை விலக்கை திரும்பப் பெறுவதாக அமெரிக்க அரசு அறிவிப்பு. இந்தியாவுடன் மத்திய கிழக்கு ஆசியாவை இணைக்கும் வர்த்தக வழித்தட திட்டம் இதனால் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது
"அதானி மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை"
அதானி குழுமம் கணக்கு வழக்கில் முறைகேடு |செய்திருப்பதாகவும் பங்கு விலையை செயற்கையாக அதிகரித்து இருப்பதாகவும் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் சுமத்திய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என செபி அறிவிப்பு. அதானி குழுமம் எந்த விதி மீறலும் செய்யவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளதாக செபி கூறியுள்ளது
மாருதி கார்களின் விலைகள் குறைப்பு
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுசுகி, தனது சிறிய மற்றும் SUV ரக கார்களின் விலைகளை ரூ.71,000 முதல் ரூ.1.29 லட்சம் வரை குறைத்துள்ளது. Alto K10, S-Presso போன்ற என்ட்ரி ரக கார்கள் ரூ.1.29 லட்சம் வரையிலும், Brezza போன்ற SUV-கள் ரூ.1.07 வரையிலும் விலை குறைப்பு, பண்டிகைக் காலம் நெருங்குவதால், நடுத்தர மக்களின் ஃபேவரட்-ஆன செலரியோ, வேகனார் கார்களுக்கு நல்ல டிமாண்ட் இருக்கும் என எதிர்பார்ப்பு
அமெரிக்காவின் ஆதிக்கம்
காசாவில் உடனடியாக போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் தோல்வி. அமெரிக்கா மீண்டும் தனது வீட்டோ அதிராகத்தை பயன்படுத்தி தீர்மானத்தை தோல்வி அடையச் செய்தது.
முதலிடம் பிடித்த ஸ்பெயின்
FIFA சர்வதேச கால்பந்து அணிகள் தரவரிசையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயின் அணி முதலிடம் பிடித்துள்ளது. இத்தரவரிசையில் பிரான்ஸ் 2வது இடத்தில் உள்ளது. நம்பர் 1 அணியாக வலம் வந்த நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா 3வது இடத்துக்கு சரிந்தது.
கொஞ்ச நேரம் கூட நிலைக்காத சந்தோஷம்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது இலங்கை வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தை சுரங்கா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோகம். ஆசியக் கோப்பை தொடரில் இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிப் பெற்ற சந்தோஷத்தில் இருந்த நிலையில், இந்த துக்கச் செய்தி துனித்துக்கு தெரியவர கண்கலங்கியபடி Dressing Room-க்கு சென்ற அவரை, ஓடிச் சென்று சக வீரர்கள் ஆறுதல்படுத்தி உள்ளார்.
அதிர்ச்சியளித்த நீரஜ் சோப்ரா
உலக சாம்பியன்ஷிப் தடகளத்தில் ஈட்டி எறிதல் பிரிவில் நடப்புச் சாம்பியனான நீரஜ் சோப்ரா, 8-வது இடத்தை பிடித்து அதிர்ச்சித் தோல்வி. டோக்கியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு ஒரு சர்வதேசப் போட்டியில் அவர் முதல் இரண்டு இடங்களுக்கு வெளியே வருவது இதுவே முதல் முறை. இந்தியாவை சேர்ந்த மற்றொரு வீரரான சச்சின் யாதவ் நான்காவது இடத்தைப் பிடித்து அசத்தினார்





















