Top 10 News Headlines: சீமான் மீது வழக்கு, விமானத்தில் தீ, தங்கத்தில் புதிய உச்சம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines Today Oct 19th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

சீமான் மீது வழக்குப்பதிவு:
நீதிமன்ற உத்தரவை அடுத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை திருமங்கலம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு நீதிமன்றம் குறித்து அவர் அவதூறாக பேசியதாக வழக்கறிஞர் சார்லஸ் என்பவர் செய்த முறையீட்டின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
விமானத்தில் தீ:
சீனாவில் ஹாங்சோ -இஞ்சியோன் செல்லவிருந்த ஏர் சீனா விமானத்தின் கைபைகள் வைக்கும் கேபினில் தீ..! பயணி ஒருவரின் பையில் இருந்த லித்தியம் பேட்டரி தானாகவே தீப்படித்து எரிந்ததால் பதற்றம். விமானம் ஷாங்காயில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை
சீன பட்டாசு பறிமுதல்:
சீனாவிலிருந்து தூத்துக்குடிக்கு கடத்திவரப்பட்ட தடைசெய்யப்பட்ட பட்டாசு மற்றும் விளையாட்டு பொம்மைகள் உள்ளிட்ட ரூ.7 கோடி மதிப்பிலான பொருட்களைப் பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை.
விகாஸ் ஈஸ்வர், மைக்கேல், சூசை, மாணிக்கம் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் மாற்றம்
அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷை பதவியிலிருந்து மாற்ற பல்கலைக்கழக சிண்டிகேட் குழு அனுமதி வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தகவல்! முறைகேடு புகார் விவகாரம் பதிவாளர் பிரகாஷ் மற்றும் 12 அலுவலர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தும் நிலையில், முறைகேடு புகாரில் சம்பந்தப்பட்ட ஒருவர், தலைமை பொறுப்பில் இருக்கக் கூடாது என சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு.
புதிய உச்சம்:
உலகளாவிய தங்க விலை உயர்வால், இந்திய வரலாற்றில் முதல் முறையாக ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு $100 பில்லியனை தாண்டியது.2024ல் சுமார் 50 டன் தங்கத்தை வாங்கியிருந்த ரிசர்வ் வங்கி, இந்தாண்டு தொடக்கம் முதல் வெறும் 4 டன் தங்கம் மட்டுமே வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா இரங்கல்
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ஆப்கானிய கிரிக்கெட் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷா இரங்கல்."ஆப்கானிஸ்தானின் 3 இளம் கிரிக்கெட் வீரர்களின் இழப்பு |மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இச்சம்பவம் முழு கிரிக்கெட் உலகிற்கே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது” ஐசிசி தலைவரான ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
மலை ரயில் ரத்து:
நீலகிரி: குன்னுர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை காரணமாக ஆங்காங்கே லேசான மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவை ரத்து
மிக கனமழை எச்சரிக்கை:
தமிழ்நாட்டில் அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்
ட்ரம்புக்கு எதிராக மக்கள் போராட்டம்
நியூயார்க்கில் 'No Kings' என்ற முழக்கத்துடன் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம்.
சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாக ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக 70 லட்சத்துக்கு அதிகமான மக்கள் வீதிகளில் இறங்கி முழக்கம்!குடியேற்றவாசிகளுக்கு எதிராக அடக்குமுறைகள்,அரசு துறைகளில் மேற்கொள்ளப்படும் பணி நீக்கங்கள், பொருளாதார கொள்கைகள் ஆகியவை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோரை புறக்கணித்தால் சம்பளம் பிடித்தம்
அரசு பணியார்கள் அவர்களுடைய பெற்றோரை புறக்கணித்தால், அவர்களுடைய சம்பளத்தில் 10 - 15% வரை பிடித்தம் செய்யப்பட்டு, அது நேரடியாக | பெற்றோர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவிப்பு.நீங்கள் மாதச் சம்பளம் பெறும்போது, உங்களுடைய பெற்றோர்களும், அதில் இருந்து மாதச் சம்பளம் பெறுவார்கள் எனவும் தெரிவித்தார்.






















